"நேரடியா கிளாஸ்க்கு போகாதவங்களை எஞ்சினியர்-னு சொல்ல முடியாது".. உயர்நீதிமன்றம் கொடுத்த பரபரப்பு தீர்ப்பு.. முழு விபரம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வகுப்புகளுக்கு நேரடியாக செல்லாமல் பொறியியல் பட்டம் பெற்றவர்களை பொறியாளர் என்று அழைக்க முடியாது என பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | "எடுத்துட்டுப்போன பொருளை எல்லாம் திரும்பி கொடுத்திடுங்கோ".. கள்ளக்குறிச்சியை சுற்றி தண்டோரா.. அதிகாரிகளின் புது முயற்சி.. வீடியோ..!

கடந்த 2019 ஆம் ஆண்டு ஹரியானா போலீஸ் ஹவுசிங் கார்ப்பரேஷன் வினோத் ராவல் என்பவரை நிர்வாக பொறியாளர் பதவிக்கு நியமித்திருந்தது. ராவல், ராஜஸ்தானை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரியில் தொலைதூர கல்வி மூலமாக பொறியியல் கல்வி முடித்திருக்கிறார். இந்நிலையில், தொலைதூர கல்வி வழியாக பொறியியல் கல்வி முடித்தவரை நிர்வாக பொறியாளராக நியமிப்பது விதிகளுக்கு புறம்பானது என நரேஷ் குமார் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தீர்ப்பு

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்துவந்த நீதிபதிகள் இன்று தீர்ப்பினை வழங்கியுள்ளனர். இதுபற்றி பேசிய நீதிபதி அனுபிந்தர் சிங் கிரேவால் பெஞ்ச், “தொலைதூரக் கல்வியின் மூலம் பொறியியல் பட்டப்படிப்பு, நேரடியாக வகுப்புகளுக்கு சென்று பயிலும் படிப்புக்கு இணையாக இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்வது கடினம். பொறியியல் படிப்பில், பாடம் குறித்த கோட்பாடுகள் கற்பிக்கப்படுகின்றன, பின்னர் அவை நடைமுறைப் பயிற்சியின் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. நேரடியாக வகுப்புகள்/ படிப்பில் கலந்து கொள்ளாத மற்றும் நடைமுறைப் பயிற்சியை மேற்கொள்ளாத ஒருவரை பொறியாளர் என்று கூற முடியாது. தொலைதூரக் கல்வி மூலம் பெறப்பட்ட பட்டங்களை நாம் ஏற்றுக்கொண்டால், MBBS படிப்புகள் தொலைதூரக் கற்றல் முறை மூலம் நடத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. இது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும்" என்றார்.

பாதிப்பு

தொலைதூர கல்வி மூலமாக கல்வி பயின்ற ஒருவரை நியமிப்பது குறித்து பேசிய நீதிபதி,"தொலைதூரக் கல்வி மூலம் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற மருத்துவரிடம் எந்த நோயாளியும் சிகிச்சை பெற விரும்புவார்களா என்பதை நினைக்கும் போது எனக்கு நடுக்கம் ஏற்படுகிறது. நாட்டின் உள்கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதில் அவர்கள் ஈடுபட்டுள்ளதால், பொறியாளர்களின் செயல்பாடுகள் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை திறமையின்மை காரணமாக பொதுமக்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்துவதோடு அரசின் செலவுகளையும் அதிகரிக்கும்" என்றனர்.

இதைத் தொடர்ந்து, தொலைதூர கல்வி மூலமாக பொறியியல் படித்த ராவலை நிர்வாக பொறியாளராக ஹரியானா போலீஸ் ஹவுசிங் கார்ப்பரேஷன் நியமித்தது செல்லாது என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

Also Read | "சிங்கிள் ஆளா Bank உள்ள வந்து.. கொள்ளையடிச்ச பாட்டி".. விசாரணையில் வெளிவந்த ஷாக்-ஆன தகவல்..தீவிர தேடுதலில் போலீஸ்..!

PUNJAB, HARYANA, HIGH COURT, EDUCATION, PUNJAB AND HARYANA HIGH COURT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்