தனியார் கம்பெனி ‘வேலைவாய்ப்பு’ 75% உள்ளூர் மக்களுக்குதான்.. மாநில அரசு ‘அதிரடி’.. செம ‘குஷியில்’ இளைஞர்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வேலைவாய்ப்பில் சொந்த மாநில மக்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாநில அரசு மசோதா நிறைவேற்றியுள்ளது.

கொரோனாவால் இந்தியாவில் பலரும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். அதனால் பொதுமக்களுக்கு தேவையான வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதிலும், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழி செய்யும் வகையிலும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்தநிலையில், ஹரியானா மாநில அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதில், தங்கள் மாநிலங்களில் தனியார் துறையில் இருக்கும் வேலைவாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.

இது மாதம் ரூ.50,000க்கு கீழ் சம்பளம் வாங்கும் வேலைவாய்ப்புகளுக்குப் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தனியார் நிறுவனங்கள், ட்ரஸ்ட்கள், தொழில் நிறுவனங்கள், சொசைட்டிகள் உள்ளிட்டவை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை அம்மாநில அரசு நிறைவேற்றியுள்ளது.

இதற்கு அம்மாநில ஆளுநர் விரைவில் ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்புதல் அளித்தால் சட்டமாக மாறி அமலுக்கு வந்துவிடும். இது அம்மாநில இளைஞர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மக்களவை எம்.பி ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், ‘தனியார் துறையில் தமிழ்நாட்டவருக்கே வேலையென சட்டம் இயற்றுக. தனியார் துறையில் உள்ள வேலைகளில் 75% ஐ சொந்த மாநிலத்தவருக்கே வழங்கவேண்டுமென அரியானா மாநில அரசு சட்டம் இயற்றியுள்ளது. தமிழக அரசும் ஏன் அப்படியொரு சட்டத்தை இயற்றக்கூடாது?’ என ரவிக்குமார் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்