"முதல் ஆளா நான் தான் போட்டுக்கிறேன்!".. 'சந்தோஷமா தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சருக்கு பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி முடிவு!'.. பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனாவுக்கு எதிராக 41 தடுப்பூசிகள் முதல் கட்ட சோதனையிலும், 17 தடுப்பூசிகள் இரண்டாம் கட்ட சோதனையிலும், மூன்றாம் கட்ட சோதனையில் 13 தடுப்பூசிகளும் இருக்கின்றன.

இதில் இரண்டு கட்ட சோதனைகளை சில தடுப்பூசிகளுக்கு நடத்தப்படுகின்றன. எனினும் இந்தியாவுக்கு நம்பிக்கையளிக்கும் தடுப்பூசியாக பாரத் பயோடெக் நிறுவனம் ICMR உடன் இணைந்து தயாரித்திருக்கும் கோவாக்ஸின் (Covaxin) தடுப்பூசி ஒன்றாக இருக்கிறது. நவம்பர் 16-ம் தேதி முதல் இந்த தடுப்பூசியின் இரண்டு கட்ட சோதனைகளும் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 22 நகரங்களில் 26,000 தன்னார்வலர்களுடன் மூன்றாம் கட்ட சோதனை நடக்கவுள்ளதாக பாரத் பயோடெக் தெரிவித்திருந்தது அந்நிறுவனம். அதன்படி நவம்பர் 20-ம் தேதி 67 வயதான ஹரியானா மாநில உள்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் கோவாக்ஸின் சோதனையில் பங்குகொண்டு முதல் டோஸை எடுத்துக் கொண்டதுடன், ''இந்த தடுப்பூசி சோதனையில் பங்கேற்கும் முதல் தன்னார்வலர் நான் தான்'' என்றும் ட்வீட் செய்திருந்தார்.

ஆனால், சுமார் 2 வாரங்கள் கழித்து மீண்டும் அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுத்தபோது, பாசிட்டிவ் என வந்திருக்கிறது. 1000 பேர் கிட்டத்தட்ட பங்குகொண்ட முதல் இரண்டு கட்ட சோதனைகளில் நம்பிக்கையான முடிவுகள் கிடைத்ததால்தான் மூன்றாம் கட்ட சோதனைக்கு (Phase 3) DGCI-யிடம் (Drugs Controller General of India) ஒப்புதல் பெற்றது பாரத் பயோடெக் நிறுவனம். ஆனால், முதல் கட்ட சோதனையில் பங்குகொண்ட தன்னார்வலருக்குத் தீவிர பக்கவிளைவுகள் இருப்பதாக வெளியான செய்திகள் சர்ச்சைக்குள்ளாகின. ஆனால், அதற்கும் தங்கள் தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்தது.

இந்நிலையில் தடுப்பூசியை எடுத்துக்கொண்டும், மீண்டும்  செய்யப்பட்ட சோதனையில் அமைச்சருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது ஏன் என்று அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், 28 நாள் இடைவெளியில் மொத்தம் இரண்டு டோஸ்களாக  கோவாக்ஸின் தடுப்பூசி அளிக்கப்படுகிறது. இதில்14 நாள் கழித்துத்தான் இரண்டாவது டோஸ் அளிக்கப்பட்டு தடுப்பூசி பலன் தருகிறதா என கண்டறியப்படும். அனில் விஜ் இதில் ஒரு டோஸ் மட்டுமே எடுத்துக்கொண்டார். அத்துடன் Double blinded and Randomized முறையில்தான் இந்த சோதனை செய்யப்படுவதாகவும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தன்னார்வலர்களில் பாதிப் பேருக்கு நிஜ தடுப்பூசியும் மீதிப் பேருக்கு எதுவுமே இல்லாத பிளாசிபோ (Placebo) ஊசிகளும் போடப்படும் போடப்பட்டு,  பாதிக்கப்பட்டவர்கள் , நிஜ தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், எத்தனை எத்தனை பேர் என்று கணக்கிடப்படும். இதை வைத்து தடுப்பூசியின் பலன் விகிதம் (Efficacy) குறித்து முடிவுக்கு வரப்படும். ஆனால் இதில் தடுப்பூசி யாருக்கு போடப்படுகிறது, பிளாசிபோ ஊசி யாருக்கு போடப்படுகிறது என்பது  தன்னார்வலர்களுக்கே தெரிவிக்கப்படாமல் ரகசியமாக வைக்கப்படும். இதுவே double blinded and randomized சோதனை எனப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்