‘ஹெல்மெட் போடலனு நிறுத்தினாங்க’.. ‘என் வண்டிகூட அவ்ளோ விலை இல்லை’.. ‘அபராத ரசீதைப் பார்த்து அதிர்ந்துபோய் நின்ற இளைஞர்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

போக்குவரத்து விதிகளை மீறியதாக ஹரியானாவைச் சேர்ந்த இருவருக்கு காவலர்கள் 47 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

ஹரியானாவில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காக தினேஷ் மதன் என்பவரை நிறுத்திய போக்குவரத்து காவலர்கள் அவரிடம் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களைக் கேட்டுள்ளனர். முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை என அவர் கூற புதிய மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் போக்குவரத்து காவலர்கள் அவருக்கு அபராதம் விதித்துள்ளனர்.

ஓட்டுநர் உரிமம், வாகனத்தின் பதிவு சான்றிதழ் இல்லாததால் தலா 5 ஆயிரம் ரூபாய், காப்பீடு இல்லை என 2 ஆயிரம் ரூபாய், காற்று மாசுபாட்டின் தரத்தை மீறியதாக 10 ஆயிரம் ரூபாய், ஹெல்மெட் அணியாததற்கு ஆயிரம் ரூபாய் என மொத்தமாக 23 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அதற்கான ரசீதை அவரிடம் கொடுத்துள்ளனர்.

இதைப் பார்த்து அதிர்ந்துபோன தினேஷ் மதன், “ஹெல்மெட் அணியவில்லை என என்னை நிறுத்தினார்கள். என்னுடைய வாகனத்தின் மதிப்பே 15 ஆயிரம் ரூபாய் தான். எனக்கு 23 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது” எனக் கூறியுள்ளார். இதேபோல அமித் என்பவருக்கும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது மற்றும் வாகனம் தொடர்பான ஆவணங்கள் இல்லாதது ஆகியவற்றிற்கு 24 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

HARYANA, HELMET, TRAFFICPOLICE, FINE, SHOCKING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்