'கத்தியை விழுங்கிய நபர்...' 'ஒன்றரை மாசமா வயித்துக்குள்ள கத்தியோடு சுத்திருக்கார்...' என்ன காரணம்...? - மருத்துவர்கள் கடும் அதிர்ச்சி...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஹரியானாவில் போதைப் பொருள் கிடைக்காததால், வீட்டில் இருந்த கத்தியை விழுங்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரும்பாலும் குடிப்பழக்கத்திற்கோ வேறு ஏதேனும் போதைப் பழக்கத்திற்கோ அடிமையான நபர்கள் அவை இல்லாவிட்டால் எந்த வித முடிவுக்கும் செல்வர் என்பதற்கு ஹரியானவை சேர்ந்த ஒருவர் தற்போது சாட்சியாக மாறியுள்ளார்.

ஹரியானா மாவட்டத்தைச் சேர்ந்த கஞ்சாவிற்கு அடிமையான ஒரு நபர் தற்போது கொரோனா ஊரடங்கு நேரத்தில் கஞ்சா கிடைக்காததால் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் என்ன செய்வதென்று அறியாமல் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து விழுங்கியுள்ளார்.

அதையடுத்து அவருக்கு சில நாட்கள் பசியின்மை மற்றும் வயிற்று வலி உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டுள்ளது. மேலும் அதனை அப்படியே வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் கடந்த ஒன்றரை மாதமாக சமாளித்துள்ளார்.

தற்போது அவரின் உடல்நிலை மிக மோசமாகியது. அதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் எக்ஸ்-ரே செய்து பார்க்கையில் அவரின் வயிற்றின் கல்லீரல் பகுதியில் 20 செ.மீ. நீள கத்தி இருந்தது மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன் பிறகே தான் கத்தியை விழுங்கியதை குறித்து மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.

பலவித பரிசோதனைகளுக்கு பிறகு கத்தி முழுமையாக பதிந்துள்ளதை உறுதிப்படுத்தி மருத்துவர்கள் அறுவை சிகிச்சையினை தொடங்கியுள்ளனர். சுமார் 3 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சைக்கு பின் வெற்றிகரமாக கத்தியை நோயாளியின் கல்லிரலில் இருந்து மருத்துவர்கள் மீட்டனர்.

இந்த இக்கட்டான சிகிச்சை குறித்து கூறிய மருத்துவர்கள், நோயாளி வயிற்றில் இருந்த கத்தி அவரின் பித்த நாளம், தமனி மற்றும் நரம்புகளுக்கு மிக அருகில் இருந்ததாகவும், அறுவை சிகிச்சையில் சிறிய தவறு ஏற்பட்டிருந்தாலும் உயிருக்கு ஆபத்தாக முடியும். கடுமையான போராட்டத்திற்கு பிறகே கல்லீரலில் பதிந்திருந்த கத்தியை அகற்றியதாகவும் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்