மூணு வருஷத்துல 5 மெர்சிடஸ் கார்.. ஒருத்தர ஏமாத்தணும்னா மொதல்ல நம்ப வைக்கணும்.. பக்காவா பிளான் பண்ணி ரூ. 2.18 கோடி மோசடி செய்த நபர்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஹரியானா: ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் நிதி நிறுவனத்திடமிருந்து சுமார் ரூ. 2.18 கோடி கடனாக பெற்று மோசடி செய்துள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertising
>
Advertising

கடன் வாங்கி மெர்செடிஸ் கார்

ஹரியானா மாநிலம் குருகிராமில் வசித்து வந்த பிரமோத் சிங் நிதி நிறுவனம் ஒன்றிடமிருந்து ரூ.27.5 லட்சம் கடன் வாங்கி மெர்செடிஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளார். அதோடு அதற்கான தவணை தொகையை முறையாக கட்டி வந்துள்ளார். இதனால்  பிரமோத் சிங்கை நம்பிய அந்த தனியார் நிதி நிறுவனம் அடுத்தத்து 4 முறை கடன் வாங்கியுள்ளார். இந்த கடன்களுக்கான தவணையையும் சில மாதங்கள் கட்டிய பிரமோத் 2018-ஆம் ஆண்டு திடீரென்று மாயமாகி விட்டார்.

ஊரை விட்டு தப்பி ஓட்டம்:

ஒரு சில மாதங்கள் தவணை தள்ளி போகவே நிதி நிறுவனம் அவரை தேடி வீட்டிற்கு சென்றபோது தான் அவர் ஊரை விட்டு தப்பி ஓடியது தெரிய வந்தது. இந்த நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு பிரமோத் சிங் மீது நிதி நிறுவனம் போலீசில் புகார் அளித்தது.  அந்த புகாரில், பிரமோத் சிங் தங்கள் நிறுவனத்திடம் இருந்து ரூ. 2.18 கோடி கடனாக பெற்று மோசடி செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாகி இருந்த அவரை கைது செய்ய தேடி வந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணை:

இந்த நிலையில், சுமார் மூன்று வருடங்கள் கழித்து தலைமறைவாகி இருந்த பிரமோத் சிங்கை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் மோசடி செய்த தொகையில் இதுவரை 3 வருடங்களில் 5 மெர்சடிஸ் கார்களை வாங்கியுள்ளதாக பிரமோத் சிங் தெரிவித்துள்ளார்.

நல்ல விலைக்கு விற்றுவிட்டதாக தகவல்:

மேலும், அதில் சில கார்களை சட்ட சிக்கல் ஏற்படாமல் நல்ல விலைக்கு விற்று விட்டதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களில் வேறு ஏதாவது திருட்டில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

HARYANA, RS. 2.18 CRORE, LOAN, MERCEDES, மெர்சிடஸ், ஹரியானா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்