'கொரோனா பரவ வாய்ப்பு இருக்கு’ ... ‘சூயிங்கம்’-க்கு தடை விதித்த மாநில அரசு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா பரவ வாய்ப்புள்ளதாகக் கூறி ஹரியானா அரசு சூயிங்கம்மை, ஜூன் 30ஆம் தேதி வரை தடை செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை சூயிங்கம்மை விற்கவோ, வாங்கவோ கூடாது எனக் கூறியுள்ளது. ஏனெனில் வாயில் மென்று ஆங்காங்கே துப்பப்படும் சூயிங்கத்தில், கொரோனா வைரஸ் உயிர்ப்புடன் இருக்கும் என்பதால், அதன்மூலம் மற்றவர்களுக்கு கொரோனா வாய்ப்புள்ளதாக ஹரியானா அரசு குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் குட்கா, பான் மசாலா போன்றவற்றின் மீது கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட தடை அடுத்த ஆண்டு வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஹரியான அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளன்ர். வற்றை மீது போடப்பட்டுள்ள தடையை உறுதிசெய்து விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை வேண்டும் என்றும் ஹரியானா அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த வாரம் இதேபோல் கொரோனா வைரஸால் உத்தரப் பிரதேச மாநில அரசு பான் மசாலா, ஹர்ரா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்கவோ, வாங்கவோ தடை விதித்தது. இந்த நடவடிக்கை அடுத்த மூன்று மாதங்களுக்காவது தொடரும் என்று ஹரியானா அரசு கூறியுள்ளது.

UTTARPRADESH, CORONAVIRUS, CHEWING, GUM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்