மாத்திரை அட்டையில் மணமக்கள் பெயர்.. வினோத திருமண பத்திரிகையை பார்த்து வியந்துபோன தொழிலதிபர்.. அந்த Caption தான் செம்ம.!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய தொழிலதிபரான ஹர்ஷ் கோயங்கா பகிர்ந்துள்ள வினோதமான திருமண பத்திரிகை சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | "அவர்கிட்ட இருந்து இது ஒன்ன மட்டும் கத்துக்கோங்க".. மறைந்த முதலீட்டு ஜாம்பவான் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா குறித்து ஆனந்த் மஹிந்திரா உருக்கம்..!

திருமண பத்திரிகை

திருமண ஏற்பாட்டில் ஒவ்வொரு தருணத்தையும் அழகாக்க மக்கள் பெரிதும் மெனக்கெடுவது உண்டு. அந்த வகையில் பத்திரிகை அடிப்பது மிக முக்கியமான வேலையாக கருதப்படுகிறது. உற்றார், உறவினர் துவங்கி பெயர் பட்டியலால் நீளும் பத்திரிகைகளுக்கு நடுவே வித்தியாசமான முறையில் தங்களது திருமண பத்திரிகை அமையவேண்டும் என நினைப்போரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் எழிலரசன் - வசந்தகுமாரி தம்பதி. இருவருக்கும் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், இவர்கள் தங்களது திருமணத்துக்காக வித்தியாசமான பத்திரிகை ஒன்றை அச்சடித்திருக்கின்றனர். பார்ப்பதற்கு மாத்திரை அட்டை போலவே இருக்கும் இந்த பத்திரிகையின் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மாப்பிள்ளையான எழிலரசன் எம்.ஃபார்ம் முடித்திருக்கிறார். மணமகள் வசந்தகுமாரி எம்எஸ்சி நர்சிங் முடித்துவிட்டு கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இருவருமே மருத்துவம் சார்ந்த துறையில் பட்டம் பெற்று, பணிபுரிந்து வருவதால் தங்களுடைய பத்திரிகையிலும் அதனை வெளிப்படுத்தியுள்ளனர். மருந்தின் பெயர், மூலப்பொருட்கள் இருக்க வேண்டிய இடத்தில் தங்களது கல்யாணம் குறித்த தகவல்களை நிரப்பி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது இந்த தம்பதி.

ஹர்ஷ் கோயங்கா

இந்திய பணக்காரர்களுள் ஒருவரும் RPG குழுமத்தின் தலைவருமான ஹர்ஷ் வர்தன் கோயங்கா ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட அறிக்கையின் படி இவருடைய சொத்து மதிப்பு 2.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அதன் அடிப்படையில் கோயங்கா இந்திய பணக்காரர்களின் பட்டியலில் 85 வது இடத்திலும் உலக பணக்காரர்களின் பட்டியலில் 1445 ஆவது இடத்திலும் உள்ளார்.

இந்நிலையில், கோயங்கா இந்த வினோதமான திருமண பத்திரிகையை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில்,"மருந்தாளுநரின் திருமண அழைப்பிதழ். இந்த நாட்களில் மக்கள் மிகவும் புதுமையாக மாறிவிட்டனர்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து நெட்டிசன்கள் இந்த வினோத திருமண பத்திரிகை குறித்து வைரலாக பேசி வருகின்றனர்.

 

Also Read | உலக அளவில் பிரபலமான வாழைப்பழ கலை படைப்பு.. இப்போ இப்படி ஒரு சிக்கல் வந்துடுச்சாம்.. நீதிபதி சொன்ன சுவாரஸ்ய தகவல்..!

HARSH GOENKA, HARSH GOENKA SHARES PHARMACIST, PHARMACIST WEDDING INVITATION, HARSH GOENKA SHARES PHARMACIST WEDDING INVITATION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்