இதுக்குதான் சொல்றோம்.. Office-க்கு வந்து வேலை பாருங்கன்னு.. பிரபல தொழிலதிபர் போட்ட கலகல போஸ்ட்.. அட ஆமால்ல..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅலுவலகத்திற்கு சென்று பணிபுரிவதால் ஊழியர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஹர்ஷ் கோயங்கா பகிர்ந்துள்ள புகைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கொரோனா
கொரோனா 2020 ஆம் ஆண்டு உலகையே ஸ்தம்பிக்க செய்தது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவியதாக சொல்லப்படும் இந்த வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பலியாகினர். இருப்பினும், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் புழக்கத்திற்கு வந்த பின்னர், உயிரிழப்புகள் கணிசமான அளவில் குறைந்திருக்கின்றன. அதேநேரத்தில் கொரோனா சமயத்தில் உலக அளவில் பல நிறுவனங்கள் வீட்டில் இருந்தே தங்களது ஊழியர்களை பணிபுரியும்படி அறிவித்தன.
அப்போது துவங்கி முன்னணி நிறுவனங்களின் ஊழியர்கள் Work From Home எனப்படும் வீட்டில் இருந்தே பணிபுரியும் வசதியையே பயன்படுத்திவருகின்றனர். ஒருபக்கம் தொடர்ந்து வீட்டிற்குள்ளேயே அடைபட்டு கிடப்பதால் மன அழுத்தம் அதிகரிப்பதாக ஊழியர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்காவின் பதிவு பலரையும் ஈர்த்துள்ளது.
ஹர்ஷ் கோயங்கா
இந்திய பணக்காரர்களுள் ஒருவரும் RPG குழுமத்தின் தலைவருமான ஹர்ஷ் வர்தன் கோயங்கா ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட அறிக்கையின் படி இவருடைய சொத்து மதிப்பு 2.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அதன் அடிப்படையில் கோயங்கா இந்திய பணக்காரர்களின் பட்டியலில் 85 வது இடத்திலும் உலக பணக்காரர்களின் பட்டியலில் 1445 ஆவது இடத்திலும் உள்ளார். 1957 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்த கோயங்கா, அங்கேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பையும் முடித்திருக்கிறார். கொல்கத்தாவின் செயின்ட் சேவியர் கல்லூரியில் பொருளாதாரம் படித்த கோயங்கா அதைத் தொடர்ந்து, ஸ்விட்சர்லாந்தில் MBA படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வைரல் பதிவு
இந்நிலையில், கோயங்காவின் பதிவில் வீட்டில் இருந்து பணிபுரியும் போது, முழு நேரமும் பணியினை மட்டுமே செய்யவேண்டும் எனவும், அதுவே அலுவலகத்திற்கு வந்து பணிபுரிந்தால், பல விஷயங்களில் நேரத்தை செலவிடலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த படத்தில், வீட்டில் இருந்து பணிபுரிவதை ஒப்பிடும்போது அலுவலகத்தில் பணிசெய்யும் நேரம் குறைவாகவும் மீதி நேரம், காபி குடிக்கவும், பிறருடைய வேலைகளுக்கு உதவவும், டிராஃபிக்கிலும், மத்திய உணவு சாப்பிடுவதிலும் கழிவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவு நெட்டிசன்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்திவருகிறது.
Also Read | புயல்ல சிக்கிய 8 கோடி ரூபாய் கார்.. நெட்டிசன்களின் நெஞ்சை உடைய வைத்த வீடியோ..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தன்னோட குழந்தைக்காக அம்மா என்னவேனா செய்வாங்க.. பிரபல தொழிலதிபர் பகிர்ந்த நெஞ்சை உருகவைக்கும் வீடியோ..!
- "5 வயசுல இப்படி ஒரு திறமையா.?".. சின்ன பையனை மெய்மறந்து பாராட்டிய பிரபல தொழிலதிபர்.!!
- "அது வெறும் நகரம் மட்டும் இல்ல, ஒரு உணர்வு".. சொந்த ஊர் குறித்து தொழிலதிபர் போட்ட பதிவு.. உருகும் நெட்டிசன்கள்..!
- மாத்திரை அட்டையில் மணமக்கள் பெயர்.. வினோத திருமண பத்திரிகையை பார்த்து வியந்துபோன தொழிலதிபர்.. அந்த Caption தான் செம்ம.!
- ஆத்தாடி எம்மாம்பெரிய ரொட்டி.."இவரைத்தான் தேடிட்டு இருக்கேன்".. இந்திய தொழிலதிபர் ஷேர் செஞ்ச வீடியோ..திகைத்துப்போன நெட்டிசன்கள்..!
- "செய்யுற வேலையை லவ் பண்ணுங்க".. தோசை மாஸ்டரின் அசாத்திய திறமை.. பாராட்டிய தொழிலதிபர்..வைரல் வீடியோ..!