"செய்யுற வேலையை லவ் பண்ணுங்க".. தோசை மாஸ்டரின் அசாத்திய திறமை.. பாராட்டிய தொழிலதிபர்..வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய தொழிலதிபரான ஹர்ஷ் கோயங்கா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ இப்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | சுட்டிக் குழந்தையுடன் போட்டி போட்டுக்கொண்டு பாடும் செல்ல நாய்.. வைரலான செம க்யூட் வீடியோ!
ஹர்ஷ் கோயங்கா
இந்திய பணக்காரர்களுள் ஒருவரும் RPG குழுமத்தின் தலைவருமான ஹர்ஷ் வர்தன் கோயங்கா டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக இயங்கிவருபவர். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட அறிக்கையின் படி இவருடைய சொத்து மதிப்பு 2.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அதன் அடிப்படையில் கோயங்கா இந்திய பணக்காரர்களின் பட்டியலில் 85 வது இடத்திலும் உலக பணக்காரர்களின் பட்டியலில் 1445 ஆவது இடத்திலும் உள்ளார்.
இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஒரு நபர் வித்தியாசமான முறையில் தோசை சுட்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.
அதிரடி தோசை
இந்த வீடியோவில் நடைபாதை கடையில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரியும் தோசை மாஸ்டர் கண்ணிமைக்கும் நேரத்தில் தோசை சுட்டு அதை தட்டுகளுக்கு பறக்க விடுகிறார். அதிரடி வேகத்தில் தோசை சுடும் இவரை பார்க்கவே அந்த கடைக்கு ஆட்கள் வருகின்றனர். நீளமான தோசைக் கல்லில் அவசர அவசரமாக சுடும் தோசையை அலேக்காக சுருட்டி வீசுகிறார் இந்த மாஸ்டர். அதை கேட்ச் பிடித்து டெலிவரி செய்கிறார் இன்னொரு ஊழியர். தோசை சுடும் போதும் சரி, அதை எடுத்து தட்டை நோக்கி வீசும் போதும் சரி மாஸ்டரின் கைகள் மிகவும் லாவகமாக செயல்படுகின்றன.
வேலையை லவ் பண்ணுங்க
இந்த வீடியோவை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கோயங்கா "உங்களுடைய சிறந்ததை கொடுக்க வேண்டுமானால் நீங்கள் செய்யும் வேலையை நீங்கள் காதலிக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோவை 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்த வீடியோவால் ஆச்சரியமடைந்த பல சமூக வலைதள வாசிகள் "இவர் மனிதரா அல்லது ரோபோட்டா?" என்றும் "அங்கு உள்ள மனிதர்கள் தோசையை விட இவரைத்தான் அதிகம் பார்க்கின்றனர்" எனவும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
கோயங்கா வெளியிட்ட அதிரடியாக தோசை சுடும் நபரின் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்