"5 வயசுல இப்படி ஒரு திறமையா.?".. சின்ன பையனை மெய்மறந்து பாராட்டிய பிரபல தொழிலதிபர்.!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய தொழிலதிபரான ஹர்ஷ் கோயங்கா தற்போது பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | "இது எப்டிங்க Possible??".. வலியுடன் ஓடி வந்த இளைஞர்.. எக்ஸ் ரே-யில் தெரிஞ்ச உண்மை.. "எப்படி வயித்துக்குள்ள போச்சுன்னே தெரிலயே"

இங்குள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயத்தில் சாதிக்க வேண்டும் என்ற அதிக ஆர்வம் இருக்கும். உதாரணத்திற்கு சிலருக்கு விளையாட்டில் பெரிய ஆளாக வேண்டும் என்றும், சிலர் போலீஸ், கலெக்டர் உள்ளிட்ட உயர் பொறுப்புகளில் அடைய வேண்டும் என்றும் கனவு காணுவார்கள்.

அதில் சிலருக்கு, தங்களின் ஆர்வம் அதிகமுள்ள துறையில் அபரிதமான திறமை இருக்கும். அப்படி ஐந்து வயது சிறுவன் தொடர்பான வீடியோ ஒன்று தான், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

பெங்களூர் பகுதியை சேர்ந்த ஐந்து வயது சிறுவன் தான் ஆரோன். பார்க்க சுட்டிக் குழந்தை போல தோன்றினாலும் அவரிடம் உள்ள திறமை அபாரத்தின் உச்சம். இந்த வயதிலேயே கால்பந்து விளையாட்டு மீது ஆரோனுக்கு ஆர்வம் மட்டும் இல்லாமல், விளையாட்டு திறனும் சற்று அதிகமாகவே உள்ளது. வீட்டிற்குள், வீட்டிற்கு வெளியே, மைதானத்தில் என பல இடங்களில் ஏதோ அனுபவம் வாய்ந்த வீரர் பந்தை அடித்து இலக்கை அடைய செய்வது போல செய்து காட்டுகிறார்.

ஆரோன் நடக்க ஆரம்பித்தது முதல், கால்பந்துடன் ஆட ஆரம்பித்ததாக அவரது தந்தை குறிப்ப்பிட்டுள்ளார். இது போக, சில சர்வதேச வீரர்கள் கூட ஆரோனின் கால்பந்து திறனை கண்டு ஒரு நிமிடம் மிரண்டு தான் போயுள்ளனர். பிரபல வீரர் ஒருவர், ஆரோனுக்கு பயிற்சி அளிக்க முன் வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்நிலையில், இந்திய பணக்காரர்களுள் ஒருவரும் RPG குழுமத்தின் தலைவருமான ஹர்ஷ் வர்தன் கோயங்கா, ஆரோன் கால்பந்து திறனை வெளிப்படுத்தும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அது மட்டுமில்லாமல், தன்னுடைய கேப்ஷனில், "இந்தியாவின் வருங்கால மெஸ்ஸி ஆரோன்" என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ, தற்போது இணையவாசிகள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

 

Also Read | "நீங்க ஏன் தம்பி இந்த வேலை பண்றீங்க??".. கேஸ் சிலண்டர் போட வந்த இளைஞர்.. சரளமாக வந்த ஆங்கிலம்.. "விசாரிச்சப்போ தான் யாருன்னு தெரிஞ்சுது"

BENGALURU, HARSH GOENKA, FOOTBALLER VIDEO, ஹர்ஷ் கோயங்கா, தொழிலதிபர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்