கொரோனாவால வயசானவங்க தான் 'அதிகம் பாதிக்கப்படுறாங்க... ஆனா இந்த 'மாநிலத்துல' மட்டும் நெலம தலைகீழ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் இந்த வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், இந்த கொடிய வைரஸ் மூலம் அதிகமாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதிப்படைந்து வரும் நிலையில், அவர்கள் அதிகம் வெளியில் நடமாட வேண்டாம் எனவும் அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால், உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிலைமைக்கு மாறாக, அங்கு கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 50 சதவீதத்திற்கு அதிகமானவர்கள் 21 முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உலகளவில் வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதற்கு நேர்மாறாக நடைபெற்றுள்ள சம்பவம் சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், உலக சுகாதார அமைப்பு, நோயாளிகள் வயதை பொறுத்து மட்டுமல்ல, உயர் ரத்த அழுத்தம், இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனைகள் நீரிழிவு நோய் போன்ற அடிப்படை மருத்துவ நிலைகளை அடிப்படையாக கொண்டது என அறிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இதுவரை சுமார் 60 % க்கு அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இது இந்தியா முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையை விட 8% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்