அங்க அடயாளங்கள் - 'ஒரு தும்பிக்கை, 4 கால், ஒரு வால்'... "யானையை கண்டுபுடிச்சுத் தாங்க ஐயா"... விக்கித்து போன 'நீதிபதி'...
முகப்பு > செய்திகள் > இந்தியாபாசத்துடன் தான் வளர்த்த யானையை கண்டுபிடித்துத் தருமாறு உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு (habeas corpus) அளித்த பாகனைக் கண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அதிர்ச்சியடைந்தார்.
வனவிலங்குகளை வளர்ப்பதற்கு டெல்லி ஏற்ற இடம் இல்லை என்பதால் அங்கு வளர்க்கப்படும் யானைகளை பறிமுதல் செய்து மறுவாழ்வு மையத்துக்கு அனுப்புமாறு கடந்த 2016ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் டெல்லி ஷாகர்பூர் பகுதியச் சேர்ந்த சதாம் என்பவர் லட்சுமி என்ற யானையை மிகுந்த பாசத்துடன் வளர்த்து வந்துள்ளார். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி யானையை அழைத்துச் செல்ல போலீசார் வந்தபோது, அளவு கடந்த பாசத்தால் யானையை பிரிய மனமில்லாத பாகன சதாம் தனது யானை லட்சுமியுடன் தப்பிச் சென்றார்.
இதையடுத்து டெல்லி காவல்துறையினர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் தனிப்படை அமைத்து சதாம் மற்றும் யானையை தேடி வந்தனர். யமுனை நதிக்கரையோர காட்டுப்பகுதியில் யானை லட்சுமியை வனத்துறையினர் கடந்த செப்டம்பர் மாதம் பிடித்தனர். அதனுடன் மறைந்து வாழ்ந்து வந்த சதாமும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து டெல்லி வனத்துறையினர் யானையை மீட்டு ஹரியானாவில் உள்ள வனவிலங்குகள் முகாமில் அடைத்தனர்.
சதாம் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 68 நாட்களுக்குப் பிறகு சிறையிலிருந்து பிணையில் வெளிவந்த சதாம், தனது யானையை மீட்டுத் தரவேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். தான் யானையின் உரிமையாளர் அல்ல, யானையின் நண்பன் என்பதால் தன்னிடமே தனது லட்சுமியை ஒப்படைக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தியிருந்தார்.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவைப் பார்த்து அதிர்ந்து போன தலைமை நீதிபதி, "யானை என்ன இந்திய குடிமகனா? இந்திய குடிமகன் ஒருவரை கண்டுபிடிக்க மட்டுமே ஆட்கொணர்வு மனுவைப் பயன்படுத்த முடியும்" எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'புதுசா இருக்கே'... 'எப்படி தலைவா 'ஒரே டிக்கெட்டை' எல்லாரும் கேன்சல் பண்ணீங்க'... நெட்டிசன்கள் கிண்டல்!
- நிர்பயா குற்றவாளிகளை 'தூக்கில்' போட நான் தயார்... '4 தலைமுறை' பணியாளர் ஒப்புதல்... 'சேவையாக' கருதுவதாக விளக்கம்...
- நிர்பயா பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை..! தேதி, நேரம் எப்போது..? நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!
- அடிச்ச 'குளிருக்கு' இதெல்லாம் ஒரு விஷயமா?... கரைபுரண்டோடிய மது... டிசம்பரில் மட்டும் '1000 கோடி'க்கு விற்பனை!
- VIDEO: ‘சும்மா போன யானையை சீண்டிய இளைஞர்’.. ‘வெறிகொண்டு ஓட ஓட துரத்திய பயங்கரம்’.. வைரலாகும் வீடியோ..!
- ‘ரோடு தெரியாத அளவுக்கு பனிமூட்டம்’!.. ‘கால்வாயில் கவிழ்ந்த கார்’!.. 2 குழந்தை உட்பட 6 பேர் பலியான பரிதாபம்..!
- நிமிடத்தில் நடந்து முடிந்த கோரம்... தண்டவாளத்தை கடந்தபோது... யானைக்கு நேர்ந்த கடும் துயரம்!
- அடுக்குமாடிக் குடியிருப்பில் ‘மளமளவென’ பரவிய தீயால்... ‘நிமிடங்களில்’ நடந்து முடிந்த பயங்கரம்... ‘குழந்தைகள்’ உட்பட ‘9 பேர்’ பலியான சோகம்...
- ‘மெட்ரோ’ ரயில் முன் பாய்ந்த கணவர்... 5 வயது ‘மகளுடன்’ மனைவி செய்த அதிர்ச்சி காரியம்... ‘சென்னை’ தம்பதிக்கு நேர்ந்த சோகம்...
- ‘காதலியுடன்’ காரில் ஏறிய இளைஞர்... திடீரென செய்த காரியத்தால் ‘உறைந்துபோய்’ நின்ற ஓட்டுநர்... ‘அடுத்து’ நடந்த பயங்கரம்...