ஹெச்1பி விசாவுக்குக் கடும் கட்டுப்பாடுகள்… பைடன் அரசு கொண்டு வரும் புதிய மசோதாக்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஹெச்1பி விசாவின் கீழ் அமெரிக்காவில் பணி வாய்ப்பு கிடைப்பது இனி வரும் காலங்களில் கடினமாக இருக்கப் போகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஆட்சியின் கீழ் ஹெச்1பி விசா தொடர்பாக பல புதிய கட்டுப்பாடுகள் உடன் மசோதக்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகத் தெரிகிறது.
ஹெச்1பி விசா மூலம் சர்வதேச அளவில் அதிகம் பயன் அடைந்தவர்கள் நம் இந்தியர்களாகத் தான் இருப்பர். இன்றும் பல இந்திய டெக் பணியாளர்களுக்கு ஹெச்1பி விசா மூலமான அமெரிக்க வேலை என்பது முக்கிய லட்சியங்களுள் ஒன்றாகவே இருக்கிறது. அமெரிக்க அதிபர் ஆக ஜோ பைடன் பதவி ஏற்றத்தில் இருந்து முந்தைய ட்ரம்ப் அரசாங்கம் கொண்டு வந்த பல நடைமுறைகளும் மாறுதலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த வகையில் ஹெச்1பி விசா நடைமுறைகளிலும் பல புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வர உள்ளது அமெரிக்க அரசு. இதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தில் Tech workforce விதி 2021 என்ற மசோதாவில் Optional Pratical Training (OPT) என்னும் திட்டத்தையே தடை செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி பல டெக் நிறுவனங்களும் பல சலுகைகளை அரசிடம் இருந்து பெற்றுக்கொள்கின்றனவாம்.
குறிப்பாக, வரிச்சலுகை மட்டுமல்லாது குறைவான சம்பளத்தில் பணியாளர்களை அமர்த்துவது போன்ற செயல்களிலும் பெரும் நிறுவனங்கள் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த மசோதா விரைவில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் அமல்படுத்தப்படும் எனத் தெரிகிறது. மேலும், ஹெச்1பி விசா வழங்கப்படுவதற்கான ஆண்டு வருமாணம் அளவீட்டை ஒரு அமெரிக்கரின் வருமான அளவை வைத்து நிர்ணயம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதுபோக, ஹெச்1பி விசா காலத்தை 3 ஆண்டுகளில் இருந்து 1 ஆண்டாக குறைக்க வேண்டும் என்றும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஹெச்1பி விசா மூலம் பல வெளிநாட்டவர்களை குறைவான சம்பளத்துக்குப் பணியமர்த்தி அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை இல்லை என நாடாளுமன்ரத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்...' 'சண்டை வேண்டாம்...' என்ன சொல்றீங்க...? 'வீடியோ காலில் நடந்த உரையாடல்...' - சீன அதிபர் 'என்ன' சொன்னார் தெரியுமா...?
- இனிமேல் 'அந்த தடை' இல்ல...! 'இந்தியர்களுக்கு' செம 'ஹேப்பி' நியூஸ்...! - ஜோ பைடன் அரசு அறிவித்த 'முக்கிய' அறிவிப்பு...!
- கவலை படாதீங்க...! அவங்களால 'உங்களுக்கு' ஏதாவது பிரச்சனை வந்துச்சுன்னா பார்த்திட்டு 'சும்மா' இருக்க மாட்டோம்...! - ஜோ பைடன் அதிரடி...!
- 'ஹெச்-1பி விசா'... 'இந்தியர்களுக்கு காத்திருக்கும் நல்ல செய்தி'... மோடி, பைடன் சந்திப்பில் நடந்தது என்ன?
- தாலிபான்கள் 'கண்ட்ரோல்'ல வர்றதுக்கு கொஞ்சம் முன்னாடி... 'ஜோ பைடன்'கிட்ட இருந்து வந்து போன்கால்...! 'மொத்தம் 14 நிமிஷம்...' என்ன பேசினார்...? - கசிந்துள்ள 'சீக்ரெட்' தகவல்கள்...!
- என்ன பண்ணி வச்சுருக்கீங்க...? இது 'எல்லாத்துக்கும்' காரண கர்த்தாவே நீங்க தான்...! 'ஒழுங்கா ராஜினாமா பண்ணிட்டு போங்க...' - டிரம்ப் பாய்ச்சல்...!
- உடனே கிளம்புங்க...! 'அடுத்தடுத்து திருப்பம்...' 'கூடுதல் படைகளை அனுப்ப ஜோ பைடன் உத்தரவு...' - என்ன நடக்கிறது...?
- H1B விசா விவகாரம்!.. தனக்குத் தானே குழி வெட்டி படுத்துக் கொண்ட அமெரிக்கா!.. இந்தியர்களின் சாய்ஸ் இனிமே 'இது' தான்!
- ஜோ பைடன் 'ரஷ்ய' அதிபர் புதினுக்கு கொடுத்த 'ரெண்டு' பரிசு...! 'அதுல ஒண்ணு அவரு ரொம்ப விரும்பி யூஸ் பண்றது...' - அதுக்கு பின்னாடி 'இப்படி' ஒரு விஷயம் இருக்கா...!
- 'இவரு வேற ரகம் பாஸ்'... '50 கோடி கொரோனா தடுப்பூசி'... 'ஜோ பைடன்' எடுத்துள்ள அதிரடி முடிவு!