'கெஸ்ட் வர ஹெலிகாப்ட்டர்'... '200 கோடி'ல கல்யாணம் பண்றோம்'... 'இத கூட பண்ணமாட்டோமா'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆடம்பரமாக திருமணம் செய்த குடும்பம், அதனால் ஏற்பட்ட குப்பைகளை அகற்ற ஆகும் மொத்த செலவையும் ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளது.

வெளிநாட்டு வாழ் இந்திய குடும்பமான குப்தா குடும்பம் தென் ஆப்பிரிக்காவில் வசித்து வருகிறது. இவரது மகனின் திருமணம் சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலம், அவ்லியில் 200 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் பல மாநில முதல்வர்கள், கத்ரீனா கயிஃப் உட்பட பாலிவுட் பிரபலங்கள், யோகா குரு பாபா ராம்தேவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களை திருமணத்திற்கு அழைத்து வர  ஹெலிகாப்ட்டர்கள் கூட  வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது. திருமண அலங்காரத்திற்கு ஸ்விட்சர்லாந்திலிருந்து மலர்கள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த பிரமாண்ட திருமணத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் எல்லாம் சேர்ந்து குப்பைகளாக மாறி மலை போன்று காட்சியளிக்கிறது.

இதனிடையே திருமணத்தில் சேர்ந்த குப்பையையும் அகற்றுவதற்கு ஆகும் செலவை ஏற்க தயாராக உள்ளதாக குப்தா குடும்பம் தெரிவித்துள்ளது. இதுவரை 150 குவிண்டால் குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குப்பைகளை அகற்றுவதற்கு ஆன மொத்த தொகை, வாகன செலவு, தொழிலாளர் கூலி, என அனைத்தும் அவரவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

UTTARAKHAND, GUPTA FAMILY, WEDDING, AULI, WASTE MANAGEMENT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்