‘ரூ 7.5 கோடி’ செலவு செய்து.. ‘40 அடி’ ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ‘முக்கிய’ ஆதாரம்... நரேந்திர தபோல்கர் ‘கொலை’ வழக்கில் ‘தீவிரமடையும்’ விசாரணை...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

எழுத்தாளரும், மருத்துவருமான நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய ஆதாரம் ஒன்று தற்போது கிடைத்துள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி புனேவின் ஓம்கரேஷ்வர் பாலத்தில் நரேந்திர தபோல்கர் காலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது. பின்னர் இந்த வழக்கில் தொடர்புடைய ஷரத் கலஸ்கர் என்பவரை கைது செய்து சிபிஐ விசாரித்துவந்த நிலையில், அவர் அளித்த தகவலின்படி கொலை செய்யப் பயன்படுத்திய துப்பாக்கியை கடற்கரை கழிமுகத்தில் வீசி எறியப்பட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அதை தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சி 5 மாதங்களாக நடைபெற்று வந்துள்ளது. மேலும் இதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தின் உதவியை நாட, அவர்கள் உக்ரைனைச் சேர்ந்த ஆழ்கடலில் நீந்துபவர்களை அனுப்பி வைத்துள்ளனர். அதன்பிறகு இதற்கென ரூ 7.5 கோடி செலவிடப்பட்டு, கடற்கரை கழிமுகத்தில் சுமார் 40 அடி வரை தோண்டப்பட்டு குற்றவாளிகள் பயன்படுத்திய துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த முக்கிய ஆதாரத்தை வைத்து சிபிஐ அதன் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஷரத் கலஸ்கர் மீது கர்நாடக பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் 2018ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

CRIME, MURDER, POLICE, NARENDRADABHOLKAR, GAURILANKESH, GUN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்