“பிரதமரா இருந்தாலும் இதேதான்”.. 'MLA மகனை' கெத்தாக 'எச்சரித்த' பெண் காவலர் 'இடமாற்றம்'!.. 'அதே' கெத்துடன் எடுத்த 'அதிரடி முடிவு'.. அதிரும் ட்விட்டர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குஜராத்தைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சரும், எம்.எல்.ஏவுமான குமார் கனானியின் மகனுமான பிரகாஷ் கனானி ஊரடங்கு விதிகளை மீறி, சுற்றிக் கொண்டிருந்ததால், கடந்த புதன்கிழமை அன்று பெண் காவலர் சுனிதா யாதவால் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

அப்போது தான் எம்.எல்.ஏவின் மகன் என்று கூறிய பிரகாஷ் கனானியிடம்,  “நீங்க யாராக வேணா இருங்க.. எம்.எல்.ஏ மகன்னா கொரோனா வராதா என்ன? பிரதமரா இருந்தாலும் ஊரடங்கில் வெளியே சுற்றுவது தவறுதான். ஊரடங்கு நேரத்துல தேவையில்லாம வெளிய சுத்துறது தப்பு” என எச்சரித்துள்ளார்.

பின்னர் பிரகாஷ் கனானி, தனது தந்தையைத் தொலைப்பேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு நடந்த விவரங்களைக் கூற, சம்பவ இடத்திற்கு வந்த அவர்,  பெண் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், ஆனால், காவலர் சுனிதா யாதவ், “நான் ஒன்னும் உங்கள் அடிமை இல்லை” என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த சம்பவத்துக்கு பின்னர், அவர் பெண் காவலர் சுனிதா யாதவ் இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் அவருக்கு இணையத்தில் பலரும் ஆதரவு தெரிவித்து வந்தனர். இதனிடையே சுனிதா யாதவ் ராஜினாமா கடிதம் அளித்துவிட்டதாகவும், ஆனால் அந்த ராஜினாமா கடிதம் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்