'ரிஸ்க் எடுத்த ஜடேஜா'...'எப்படியாது காப்பாத்தணும்'...'அது மட்டும் தான் தோணுச்சு'...வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வெள்ளத்தில் தத்தளித்த இரு பெண் குழந்தைகளை தனது உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய காவலரின் செயல் பலரையும் நெகிழ செய்துள்ளது.

குஜராத் மாநிலம் கல்யாண்பூர் கிராமத்தில் வெள்ளத்தில் தத்தளித்த இரு பெண் குழந்தைகளை பிருத்விராஜ் ஜடேஜா என்ற காவலர் தோளில் சுமந்தபடி காப்பாற்றி கரை சேர்த்தார். தண்ணீர் இடுப்பளவு சென்ற நிலையிலும் ரிஸ்க் எடுத்து இரண்டு பேரையும், ஒன்றை கிலோ மீட்டர் தூரம் வரை தோளில் சுமந்து சென்று காப்பாற்றியுள்ளார். இதனிடையே இரு குழந்தைகளையும் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கிலேயே வெள்ளத்தை கடந்து வந்ததாக பிருத்விராஜ் ஜடேஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் '' கல்யாண் சாலையில் ஏற்பட்ட வெள்ளத்தில் 40 பேர் சிக்கி கொண்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நாங்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்றோம். அங்கு சென்ற பின்பு எதையும் யோசிக்காமல் இரண்டு குழந்தைகளையும் எனது தோளில் தூக்கிக் கொண்டு சென்றேன்'' என ஜடேஜா கூறினார்.

இதனிடையே காவலர் ஜடேஜாவின் செயலுக்கு குஜராத் முதலமைச்சர் விஜய் ருபானி, அம்மாநில கூடுதல் டிஜிபி ஷம்சர் சிங் மற்றும் ஏராளமான திரைபிரபலங்கள் பாராட்டியுள்ளனர். குழந்தைகளை காவலர் காப்பாற்றிய வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

GUJARAT POLICE, GUJARAT FLOOD, PRUTHVIRAJ JADEJA

மற்ற செய்திகள்