'லஞ்ச்' சாப்பிட்டு 'தூங்கினது' ஒரு தப்பா சார்...? அதுக்கு போய் 'இப்படியா' பண்ணுவாங்க...? - கதறும் மனைவி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெண் குழந்தை பெற்றுக்கொடுத்த காரணத்தால் மனைவியை விரட்டியடித்த சம்பவம் குஜராத் மாநிலத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஷாஹிபாக் பகுதியில் வசித்து வரும் பெண் 24 வயதான பெண் ஒருவர் தன் கணவர் மீதும் அவரின் குடும்பம் மீஷும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
திருமணமான சில நாட்கள் நன்றாக சென்று கொண்டிருந்த தம்பதிகளின் வாழ்க்கையில் நாட்கள் செல்ல செல்ல சண்டை சச்சரவுகள் அதிகரித்துள்ளன. தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமியாரும், கணவரும் சேர்ந்து அந்த பெண்ணை அடிக்கடி கொடுமைப்படுத்தியுள்ளனர்.
பல வருடங்களாக நடந்த கொடுமையை தாங்க முடியாத பாதிக்கப்பட்ட பெண் தற்போது பெண் மாதவ்புரா காவல் நிலையத்தில், தனது கணவர் மற்றும் மாமியார் மீது குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யுமாறு புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் 'என் கணவர் மற்றும் என் மாமியார் என்னை பல ஆண்டுகளாக கொடுமைக்கு உட்படுத்தி வருகின்றனர். ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி என் மாமியார் என்னை அடிக்க செய்வார்
நான் பகல் நேரத்தில் சாப்பிட்டுவிட்டு உறங்கினால் அது பிடிக்காமல் அவரது மாமியார் அவரை அடித்து துன்புறுத்தி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கனவே இந்த பிரச்சினைக்காக காவல் நிலையம் வரை சென்றேன்.
அந்நேரம் போலீசார் எங்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆனால் நான் ஆண் குழந்தையை பெற்றெடுக்காமல் இருப்பதற்கும் என்னை அவர்கள் கொடுமைப்படுத்தி வந்தனர்.
இப்போது கடந்த பிப்ரவரி மாதம் என் கணவர் என்னை என் அம்மா வீட்டிற்கு விரட்டி அடித்தார். எங்கள் ஊர்த் தலைவர்கள் சமரசம் செய்ய முயன்றும் என் கணவர் வீட்டார் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. இதுவரை என் கணவர் வீட்டார் பல கொடுமைகளை எனக்கு செய்துள்ளனர்' என குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் வீட்டாரை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தீபாவளி கிஃப்ட்'க்கு எப்போவும் போல ஸ்வீட், போனஸ் தருவேன்னு நினைச்சீங்களா...? 'இந்த தடவ ஸ்பெஷல் கிஃப்ட்...' 'மாஸ் காட்டிய நிறுவனம்...' - துள்ளி குதித்த ஊழியர்கள்...!
- நல்ல 'விஷம்' இருக்குற 'பாம்பா' ஒண்ணு கொடுங்க சார்...! 'மருமகள் போட்ட மாஸ்டர் பிளான்...' 'இப்படி' ஒரு வழக்கமா...? அந்த பக்கம் 'தலை' வச்சு படுக்க கூடாது போலையே...!
- VIDEO: என்னங்க 'இத' போய் மிக்ஸ் பண்றீங்க...? 'அதனால தான் கூட்டம் சும்மா அள்ளுது...' 'இப்படி ஒரு ஆம்லெட் எங்க தேடினாலும் கிடைக்காது...' - வைரல் வீடியோ...!
- இல்லங்க...! 'அதெல்லாம் முடியவே முடியாது...' 'எனக்கு என் ஹஸ்பண்ட் வேணும்...' - இளம்பெண் எடுத்துள்ள 'அதிரடி' முடிவு...!
- என் கணவரோட 'விந்தணுவ' பாதுகாக்கணும்...! 'இன்னும் 24 மணி நேரம் தான் இருக்கு...' 'முடியாது என மறுத்த டாக்டர்கள்...' - '15 நிமிசத்துல' அதிரடி 'தீர்ப்பை' வழங்கிய நீதிமன்றம்...!
- 'இந்த மாதிரி கார் வாங்குறவங்களுக்கு...' 'ரூ.1.50 லட்சம் ஊக்கத்தொகை கொடுப்போம்...' - மாஸ் அறிவிப்பை வெளியிட்ட மாநிலம்...!
- என்கிட்டயே சோசியல் டிஸ்டன்ஸா...? 'மாமியார் போட்ட மாஸ்டர் பிளான்...' - சதிவலையில் சிக்கிய மருமகள்...!
- 'இது என் அன்பு மகனுக்காக நான் கொடுக்க போற பரிசு...' 'இத அவன் வாழ்க்கையில மறக்கவே கூடாது, அப்படி ஒண்ணா இருக்கும்...' - 2 வயசு மகனுக்கு அப்பா அளித்துள்ள சர்ப்ரைஸ்...!
- "அப்பாவும் நான் தான்... அம்மாவும் நான் தான்..." திருநங்கை மருத்துவரின் வினோத 'ஆசை'... அதுக்காக அவங்க செய்யப் போற 'காரியம்'!!
- '1 KG வேஸ்ட் பிளாஸ்டிக் கொடுத்திட்டு...' இலவசமா 'இத' வாங்கிட்டு போங்க...! - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டெல்லி மாநகராட்சியின் GARBAGE CAFE...!