140 பேரை பலி கொண்ட குஜராத் கேபிள் பாலம்.. விபத்துக்கு சில மணி நேரம் முன்பே கணித்த நபர்.. பகீர் காரணம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குஜராத் மாநிலத்தில் மோர்பி நகரில் மச்சு ஆற்றில் மீதுள்ள தொங்கு பாலம் திடீரென இடிந்து விழுந்த நிலையில், இதன் காரணம் குறித்து ஒரு குடும்பத்தினர் கூறி உள்ள தகவல், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | சிஎஸ்கே பகிர்ந்த ட்வீட்டில்.. ரெய்னா போட்ட கமெண்ட்.. மனுஷன் பழச இன்னும் மறக்கலபா".. எமோஷனல் ஆன ரசிகர்கள்!!

குஜராத் மாநிலத்தில் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த மோர்பி பாலம், மச்சு ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, இந்த பாலம் முற்றிலும் பழுது பார்க்கப்பட்டு பின்னர் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தான், திடீரென மோர்பி கேபிள் பாலம் இடிந்து விழுந்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று மாலை இந்த தொங்கு பாலத்தின் மீது ஏராளமான மக்கள் குவிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அந்த சமயத்தில் ஆட்கள் அதிகமானதன் காரணமாக மோர்பி பாலம் திடீரென அறுந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனைத் தொடர்ந்து, பாலத்தில் இருந்த ஏராளமான மக்களும் ஆற்றுக்குள் விழுந்தனர். இது தொடர்பாக தகவலறிந்து மீட்புப்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். மீட்புப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 130 க்கும் மேற்பட்டோர் வரை உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. 100 க்கும் மேற்பட்டோர் வரை காயம் அடைந்திருப்பதாகவும் தகவல் தெரிவிக்கும் நிலையில், நீச்சல் தெரிந்த பலரும் நீந்தியே கரைக்கு சென்று தங்கள் உயிரை காத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தொங்கு பாலத்தில் நடந்த விபத்திற்கான காரணம் குறித்து அங்கே சில மணி நேரங்கள் முன்பு சென்ற குடும்பத்தினர் தெரிவித்துள்ள விஷயம், பேரதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.

அகமதாபாத் பகுதியை சேர்ந்த விஜய் கோஸ்வாமி என்பவர் தனது குடும்பத்தினருடன் விபத்து நடப்பதற்கு சில மணி நேரங்கள் முன்பு மோர்பி தொங்கு பாலத்தில் சென்றுள்ளார். அப்போது, சுமார் 200 பேருக்கும் மேற்பட்டோர் வரை பாலத்தில் இருந்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அங்கே இருந்த இளைஞர்கள் சிலர் பாலத்தை அசைக்க ஆரம்பித்ததையும் அவர்கள் கவனித்துள்ளனர்.

தொங்கு பாலம் என்பதால் இளைஞர்கள் செய்த விஷயம், மற்ற அனைவருக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்பதையும் விஜய் கோஸ்வாமி உணர்ந்துள்ளார். இதனால், பாதி பாலம் சென்ற பிறகு மீண்டும் திரும்பி வந்துள்ளனர் விஜய்யின் குடும்பத்தினர். மேலும், அங்கிருந்த ஊழியர்களிடமும் இளைஞர்கள் செயலில் உள்ள ஆபத்தை விஜய் கோஸ்வாமி எடுத்துரைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, விஜய் கோஸ்வாமி மற்றும் குடும்பத்தினர் அவர்கள் வீட்டிற்கு வந்த அடுத்த சில மணி நேரத்தில் தான் மோர்பி பாலம் அறுந்து விழுந்து துயர சம்பவமும் அரங்கேறி உள்ளது.

Also Read | தப்பு பண்ணது அவர் இல்லையா??.. 38 வருஷம் சிறை.. இத்தனை நாள் கழிச்சு DNA டெஸ்ட்டில் தெரிய வந்த உண்மை

GUJARAT, GUJARAT BRIDGE, GUJARAT CABLE BRIDGE COLLAPSE, MORBI BRIDGE COLLAPSE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்