குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள்.. பிரதமர் மோடி, ராகுல் காந்தி, கெஜ்ரிவால் ரியாக்ஷன் என்ன?
முகப்பு > செய்திகள் > இந்தியாகுஜராத், இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி, கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றன. இதில் குஜராத் மாநிலத்தில் பாரதிய ஜனதாவும் ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கிரசும் வெற்றி பெற்றிருக்கின்றன. குஜராத் மாநிலத்தில் பாஜக வரலாற்று வெற்றியைப் பெற்று 7 -வது முறையாக ஆட்சியமைக்க இருக்கிறது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 156 இடங்களில் வென்று அறுதிப்பெரும்பான்மையுடன் பாஜக குஜராத்தில் ஆட்சியமைக்கிறது. இங்கே காங்கிரஸ் 17 இடங்களிலும் ஆம் ஆத்மி 05 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கின்றன.
அதேநேரத்தில் இமாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. அங்கே காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் வென்று ஆட்சியமைக்கிறது. பாஜக 25 இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது. ஆம் ஆத்மி இமாச்சல பிரதேசத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. இந்நிலையில், இதுகுறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
குஜராத் தேர்தல் முடிவுகள் குறித்து பேசியுள்ள பிரதமர் மோடி,"குஜராத்தின் தேர்தல் முடிவுகளை பார்த்து உணர்ச்சிகளில் மூழ்கியுள்ளேன். வளர்ச்சிக்கான அரசியலை மக்கள் ஆசிர்வதித்துள்ளனர். மக்கள் சக்திக்கு நான் தலைவணங்குகிறேன். வளர்ச்சியின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையே இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. நாட்டுக்கு சவாலான நிலை வரும்போதெல்லாம் மக்கள் பாஜக மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர்" என்றார்.
இருமாநில தேர்தல் குறித்து பேசிய ராகுல் காந்தி,"இமாச்சல பிரதேசத்தில் மகத்தான வெற்றியை கொடுத்த மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவோம் என உறுதியளிக்கிறேன். கட்சி தொண்டர்களின் உழைப்பே இந்த வெற்றியை சாத்தியப்படுத்தியுள்ளது. குஜராத் மக்களின் உத்தரவை பணிவுடன் ஏற்கிறோம். மறுசீரமைப்புடன் நாட்டின் வளர்ச்சி மற்றும் மாநில மக்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடுவோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநில தேர்தல் முடிவுகள் பற்றி பேசிய அரவிந்த் கெஜ்ரிவால்,"10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆம் ஆத்மி சிறிய கட்சியாக இருந்தது. தற்போது டெல்லி மற்றும் பஞ்சாப்பில் ஆட்சியில் இருக்கிறது. மேலும், தேசிய கட்சியாக உருவெடுத்திருக்கிறது. ஒரு கட்சி தேசிய கட்சியாக அங்கீகாரம் பெறவேண்டும் என்றால் 4 மாநிலங்களில் மாநில கட்சியாக இருக்க வேண்டும். முன்னர் கோவாவில் மாநில கட்சியாக ஆம் ஆத்மி அங்கீகரிக்கப்பட்டது. தற்போது, குஜராத் மாநில தேர்தல் மூலமாக தேசிய கட்சியாக ஆம் ஆத்மி உயர்ந்திருக்கிறது. இதற்காக குஜராத் மக்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பாஜகவின் கோட்டையான குஜராத்தில் 13 சதவீத ஓட்டுகளுடன் நுழைந்திருக்கிறோம்" என்றார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை குஜராத் தேர்தல் காட்டுவதாகவும், வளர்ச்சி மற்றும் மக்கள் நலனை முன்னிறுத்திய பாஜகவுக்கு மக்கள் மகத்தான வெற்றியை வழங்கி இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அதேபோல பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குஜராத் தேர்தல் முடிவுகள் பற்றி பேசுகையில்,"பிரதமர் நரேந்திர மோடி மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் பிரதிபலிப்பே இந்த தேர்தல் முடிவு" என்றார்.
Also Read | "ஹலோ MLA".. தேர்தலில் வெற்றிபெற்ற மனைவி.. ரவீந்திர ஜடேஜா போட்ட நெகிழ்ச்சியான போஸ்ட்..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- யாத்திரை நடுவே பாஜக தொண்டர்களுக்கு ஃபிளையிங் கிஸ் கொடுத்த ராகுல் காந்தி.. வீடியோ..!
- "இது சரியில்ல".. கனடா பிரதமரிடம் அச்சுறுத்தும் தொனியில் பேசினரா சீன அதிபர்? வைரல் வீடியோ குறித்து சீனா பரபரப்பு விளக்கம்.! G20 Summit
- "டாக்டர். இளையராஜா..".. இசைஞானிக்கு பட்டம் வழங்கிய பிரதமர் மோடி.! உடனிருந்த முதல்வர் ஸ்டாலின்..!
- "நோ.. இப்படி ட்ரை பண்ணு".. சிறுவனுக்கு கராத்தே டெக்னிக் சொல்லிக்கொடுத்த ராகுல் காந்தி.. வைரலாகும் வீடியோ..!
- தெலுங்கானாவில் திம்சா நடனமாடிய ராகுல் காந்தி.. அசந்துபோன பொதுமக்கள்.. வீடியோ..!
- சிறுவனுடன் Push-up சேலஞ்ச்.. சாலையில் தண்டால் எடுத்த ராகுல் காந்தி.. வைரலாகும் வீடியோ..!
- டக்குனு காரை நிறுத்தி கீழே இறங்கிய பிரதமர் மோடி.. முதியவர் கொடுத்த அன்பு பரிசு.. வைரலாகும் வீடியோ..!
- "45 வருஷமா இந்த இடம் மாறவே இல்ல".. சுற்றுலாப்பயணி போட்ட உருக்கமான போஸ்ட்.. பிரதமர் மோடி செஞ்ச கமெண்ட்.. வைரல் ட்வீட்..!
- ராகுலை பாத்ததும்.. திடீர்ன்னு சிறுமி செஞ்ச விஷயம்.. கூட்டத்துக்கு மத்தியில் நடந்த சம்பவம்!!
- தாக்குதல் தீவிரமடைந்த நேரம்.. நைட் 12.30 மணிக்கு போன் செஞ்சு பிரதமர் சொன்ன விஷயம்.. வைரலாகும் அமைச்சர் பேசும் வீடியோ..!