கள்ளக்காதல் உறவு வைத்து இருந்ததற்காக பணி நீக்கம் செய்ய முடியாது.. குஜராத் உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
முகப்பு > செய்திகள் > இந்தியாஅகமதாபாத்: "கள்ளக்காதல் உறவு என்பது சமுதாயத்தின் பார்வையில் ஒழுங்கீனமானதாக கருதப்பட்டாலும், அதை குற்றமாக கருதி அரசு ஊழியரை பணியில் இருந்து நீக்க முடியாது" என்று குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசாங்க ஊழியர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் பனியில் தவறிழைத்தால் அதற்காக துறை ரீதியான விசாரணை நடைபெறும். அந்த விசாரணையில் அவர்கள் தவறு செய்திருந்தது நிரூபிக்கப்பட்டாலே அந்த குற்றத்திற்கேற்றவாறு தண்டனை அளிக்கப்படும். அது நிரந்தரப் பனி நீக்கமாகவும் இருக்கலாம். ஆனால் அந்த தீர்ப்பை எதிர்த்து எல்லா நீதிமன்றங்களில் நியாயம் கேட்கும் உரிமை பதவி நீக்கம் செய்யப்பட்டவருக்கு உண்டு. அசைக்கமுடியாத சாட்சிகள், மறுக்க முடியாத குற்றம் இருந்தால் தான் காவல்துறையால் வெற்றி காணமுடியும். அதேபோன்று காவலர் ஒருவர் தகாத உறவால் பணியை இழந்து, நீதிமன்றத்தில் நீதி கோரிய சம்பவம் குஜராத்தில் அரங்கேறியுள்ளது.
குஜராத்தை சேர்ந்த காவலர் ஒருவர், தான் வசித்து வந்த காவலர் குடியிருப்பில் உள்ள விதவையுடன் தகாத உறவு வைத்திருந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி, மனைவி, பிள்ளைகள் உள்ளனர். இதனால், இவர் நடத்தை சரியில்லை என கூறி கடந்த 2013ம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து அவர் அகமதாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், "விதவைப் பெண்ணும் நானும் முழு விருப்பத்தோடு, இருப்பதாக ஒப்புக்கொண்ட பிறகும், காவல் துறை முறையாக விசாரிக்காமல் எனக்கு நோட்டீஸ் அனுப்பியது. எந்த சூழலிலும் அந்த பெண்ணை ஏமாற்றவில்லை. எனவே, என்னை பணி நீக்கம் செய்ததை ரத்து செய்ய வேண்டும்" என்று கோரினார். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சங்கீதா விஷேன் முன்பு கடந்த 8ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, "மனுதாரர் கட்டுப்பாடுகள் நிறைந்த காவல்துறையில் பணி புரிந்தாலும், தகாத உறவு என்பது சமுதாயத்தில் பார்வையில் ஒழுங்கீனமானதாக பார்க்கப்பட்டாலும், அதனை நடத்தை தவறாக கருதி அவரை பணியில் இருந்து நீக்க முடியாது.
இது அவரது தனிப்பட்ட வாழ்க்கையுடன் தொடர்புடையது. அவர் அப்பெண்ணை மிரட்டவோ, பணம் பறிக்கவோ இல்லை. எனவே, நடத்தை விதிகள் 1971க்கும் அவரை பணி நீக்கம் செய்ததற்கும் தொடர்பில்லை. எனவே, அவரது பணி நீக்கத்தை ரத்து செய்வதுடன், அகமதாபாத் காவல்துறை அவரை உடனடியாக பணியமர்த்த வேண்டும். மேலும், பணி நீக்கம் செய்த 2013ம் ஆண்டு நவம்பர் முதல் தற்போது வரையிலான காலத்துக்கு ஊதியத்தின் 25 சதவீதத்தை வழங்க வேண்டும்,’ என உத்தரவிட்டார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘என்ன அம்மா வீடு திறந்து கிடக்கு’.. உள்ளே சென்று பார்த்த மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. சென்னையில் நடந்த ஷாக்..!
- ‘அவங்க எங்க அம்மா தான்’.. 4 வருச தவிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த போன் கால்.. ஆனந்த கண்ணீரில் குடும்பம்..!
- 'வடை போடவேண்டிய சட்டியுடன் அங்க ஏ போனீங்க தம்பி .. வாங்க ஜெயிலுக்குப் போகலாம்'.. தூக்கிய போலீஸ்
- தனியாக இருந்த கேரள பெண் மர்ம மரணம்.. சிக்கிய குமரி MBA பட்டதாரி.. அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்..!
- திருமணத்தை மீறிய உறவு.. ஆண் நண்பருடன் வாக்குவாதம்.. பெண் வனக்காவலருக்கு நடந்த விபரீதம்..!
- "நகையை காணோம்".. புகார் கொடுத்தவர் மேல போலீசுக்கு வந்த டவுட்.. விசாரணையில் வெளிவந்த "பலே பிளான்"..!
- "எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்".. ஆண் நண்பருடன் சேர்ந்து மாமியாருக்கு ஸ்கெட்ச்.. CCTV-யில் சிக்குன மருமகள்
- என் புருஷன முடிச்சிடலாம்.. மனைவியின் செல்போனில் சிக்கிய ஆதாரம்.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் தெரிய வந்த உண்மை
- கால் டாக்ஸி ஓட்டுநர் கொலையில் திடீர் திருப்பம்.. சிக்கிய கணவன் - மனைவி.. பரபரப்பு வாக்குமூலம்
- 3 பெண்களை தீர்த்து கட்டிய கும்பல்.. அப்பா மகனிடம் சொன்ன ஒற்றை வார்த்தை.. 50 வருசத்துக்கு பின் போலீசுக்கு கிடைத்த துப்பு..!