ஒண்ணா சேர முடியாதுல்ல".. காதல் ஜோடி எடுத்த சோக முடிவு... சிலைகளுக்கு திருமணம் நடத்தி கண்ணீர் விட்ட குடும்பத்தினர்.!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுஜராத் மாநிலம், தாபி என்னும் பகுதியை சேர்ந்தவர் கணேஷ். அதே பகுதியை சேர்ந்தவர் ரஞ்சனா. இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஆனால், கணேஷ் மற்றும் ரஞ்சனா ஆகிய இருவரின் வீட்டிலும் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளதாக தெரிகிறது. இதன் பெயரில் பெரிய அளவில் வாக்குவாதம் மற்றும் சண்டைகளும் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
காதலித்த தங்களால் சேர்வதற்கு முடியாமல் இருந்ததால் கணேஷ் மற்றும் ரஞ்சனா ஆகிய இருவரும் கடும் மன வேதனையில் இருந்ததாக தெரிகிறது. இதனால் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துக் கொள்ளவும் அவர்கள் இருவரும் முடிவு செய்துள்ளனர். அதன்படி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கணேஷ் மற்றும் ரஞ்சனா ஆகிய இருவரும் இணைந்து உயிரையும் மாய்த்துக் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றது.
அப்படி இருக்கையில், இந்த காதல் ஜோடி உயிரிழந்து சுமார் ஆறு மாதங்களான நிலையில், அவர்கள் சேர்ந்து வாழ முடியாமல் போனதற்கு தாங்கள் தான் காரணம் என்றும் அவர்களின் குடும்பத்தினர் மனம் வருந்தி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.
இந்த நிலையில், கணேஷ் மற்றும் ரஞ்சனா ஆகியோர் சேராமல் போனதை எண்ணி புதிதாக ஒரு விஷயத்தை குடும்பத்தினர் யோசித்துள்ளனர். அதன்படி, கணேஷ் மற்றும் ரஞ்சனா ஆகியோரின் சிலையை வைத்து அவற்றிற்கு முறைப்படி குடும்பத்தினர் சேர்ந்து திருமணம் செய்து வைத்துள்ளனர். உயிரிழந்த காதலர்களின் ஆன்மா சாந்தி அடைவதற்காகவும், அவர்களின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு இதனை செய்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து உயிரிழந்த ரஞ்சனாவின் தாத்தா ஒருவர் பேசுகையில், கணேஷ் தங்களின் தூரத்து உறவினர் தான் என்றும் அதன் காரணமாக திருமணத்திற்கு அவர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் கூறி உள்ளார். அவர்கள் இருவரும் மிக அதிகமாக ஒருவரை நேசித்து வந்ததால் இரண்டு குடும்பங்களும் சேர்ந்து இந்த ஆலோசனையை கையில் எடுத்து செயல்படுத்தியதாகவும் மேலும் அவர் கூறி உள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "நாங்க பெற்றோராக போறோம்".. ஆண் தம்பதி மகிழ்ச்சி பதிவு.. ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்!!
- கணவரின் போனுக்கு வந்த மனைவியின் வீடியோ.. லட்சக்கணக்கில் பறிபோன பணம்.. போலீஸ் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்..!
- "இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம்".. பைக்கில் போன காதல் ஜோடி.. நள்ளிரவில் மோதிய லாரியால் நேர்ந்த துயரம்!!
- தனியாக வாழ்ந்துவந்த பெண் சடலமாக மீட்பு.. ஆரம்பத்துல இருந்தே போலீசுக்கு உறுத்தலாக இருந்த விஷயம்.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..!
- "ஓட்டு போடுறோம்.. ஆனா யாரும் உள்ள வரக்கூடாது".. அரசியல் கட்சியினருக்கு தடை விதித்துள்ள கிராமம்.. பல வருஷமா இப்படித்தானாம்.!
- இந்திய ராணுவத்துக்கு பறந்த திருமண பத்திரிக்கை.. "அதுல இருந்த விஷயம் தான் இப்ப செம ட்ரெண்டிங்"!!
- மனைவியுடன் சென்று அமித் ஷாவை சந்தித்த ரவீந்திர ஜடேஜா.. சந்திப்பு குறித்து வைரல் பதிவு!
- செல்ல நாய்க்கு பாரம்பரிய முறையில் திருமணம்.. பத்திரிகை அடிச்சு, விருந்து போட்டு அமர்க்களப்படுத்திய குடும்பத்தினர்..!
- "ஹேப்பி பர்த்டே ஆட்டுக்குட்டி".. DJ பார்ட்டி எல்லாம் வச்சு அமர்க்களப்படுத்திய உரிமையாளர்.. யாரு சாமி இவங்க..!
- 1979 "மச்சு அணை உடைப்பு" விபத்திலேயே உயிர் பிழைத்த பெண்.. மோர்பி தொங்கு பால விபத்தில் உயிரிழந்த சோகம்.!