பார்க்கிங் கட்டணமே காரோட விலை பக்கத்துல வந்திடுச்சே...! '58 மெயில் அனுப்பினோம்...' 'எந்த ரிப்ளையும் இல்ல...' - கேஸ் போட்ட வக்கீலுக்கே இந்த நிலைமையா...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வழக்கறிஞர் ஒருவர் தன் காருக்காக வழக்கு போட்டு மனுதாரரே ரூ.91000 பார்க்கிங் கட்டணம் செலுத்திய சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது.

சோனா சாகர் என்ற இளம் பெண் வழக்கறிஞர் குஜராத் மாநிலம் காந்திநகரில் வசித்து வருகிறார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7 ஆம் தேதி தனது டாடா நானோ காரினை, பழுதுநீக்கம் செய்வதற்காக, அதே பகுதியை சேர்ந்த டாடா வாகனங்களை பழுதுபார்க்கும் நிலையமான ஹர்சோலியா பிரதர்சில் விட்டிருக்கிறார். அதையடுத்து பழுது நீக்கம் செய்யப்பட்ட நானோ காருக்கு 9,900 ரூபாயை கட்டணமாக செலுத்த கூறி சர்வீஸ் செய்த பணியாளர்கள் சோனா சாகரிடம் கூறியுள்ளனர்.

அப்போது தன் காரின் குளிர்சாதன வசதியும், மியூசிக் சிஸ்டமும் பழுதாகி உள்ளதாக கூறி, கட்டணம் செலுத்தமுடியாது என்று பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, வண்டியை ஹர்சோலியா பிரதர்ஸ் பழுதுநீக்க நிலையத்திலேயே நிர்கதியாக விட்டுச்சென்றார்.

அதையடுத்து வழக்கறிஞர் சோனா சாகர், 2019 ஆண்டு காந்திநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் வாயிலாக , ஹர்சோலியா பிரதர்ஸ் பழுதுநீக்கும் நிலையத்திற்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். அந்த நோட்டீஸில் அவர், பழுதுநீக்கும் நிலையம் முறையாக செயல்படவில்லை என்றும், அவரது டாடா நானோ காரை முழுமையாக பழுதுசெய்து அந்த நிறுவனம் அவரிடம் திருப்பித்தர வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் அதற்கு பதிலளித்த ஹர்சோலியா பிரதர்ஸ் நிலையம், காரினை எடுத்துச்செல்லும்படி 58 மின்னஞ்சல்களை அவர்கள் அனுப்பியுள்ளதாகவும், அதற்கு சோனா சாகர் எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் கூறியது அதுமட்டுமல்லாமல், காரினை நிர்கதியாக நிறுத்திவிட்டு சென்றதற்காக, நாளொன்றிற்கு 100 ரூபாய் விகிதம் , 910 நாட்களுக்கு ரூ .91000 பார்க்கிங் கட்டணம் செலுத்தவேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது இந்த வழக்கிற்கு தீர்ப்பளித்த காந்திநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம், ரூ 91,000 பார்க்கிங் கட்டணத்தை சோனா சாகர் செலுத்தவேண்டும் என்று கூறியது. அதன் விளக்கமாக,  'பழுதுநீக்க கட்டணத்தை செலுத்தாததால் சோனா சாகரை நுகர்வோராக கருத முடியாது என்று கூறினார். மேலும்,பார்க்கிங் கட்டணத்துடன், கூடுதலாக ரூ.3500 சர்விஸ் சார்ஜை சோனா சாகர் வழங்க வேண்டும்' எனக் கூறிப்பிட்டுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்