திருமண நாளில் உயிரிழந்த மணப்பெண்.. பெரும் துயரத்திலும் கனத்த இதயத்துடன் நடத்திய கல்யாணம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் தனது திருமண சடங்கின் போது இளம்பெண் உயிரிழந்த சூழலில் அதன் பின்னர் நடந்த சம்பவம், கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | முதல் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே மரணமடைந்த இயக்குனர்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!
குஜராத் மாநிலத்தின் பாவ்நகர் என்னும் பகுதியை சேர்ந்தவர் ஹீதல். இவருக்கும், நரி என்ற கிராமத்தை சேர்ந்த விஷால் என்ற இளைஞருக்கும் இருவரது குடும்பத்தினரால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, திருமண நாளும் வர இது தொடர்பான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் மிக மும்முரமாக கவனித்து வந்தனர். தொடர்ந்து தனது திருமண நாளில் மணமக்களும் உற்சாகமாக இருந்த சூழலில், அங்கே ஆடல், பாடல் என உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் மிகவும் குதூகலமாக இருந்து வந்ததாகவும் தெரிகிறது.
இந்த நிலையில், யாரும் எதிர்பாராத ஒரு அசம்பாவித சம்பவம் அங்கே அரங்கேறி உள்ளது. அதாவது மணப்பெண் ஹீதல் திடீரென அங்கே மயக்கம் போட்டு விழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனைக் கண்ட அனைவரும் பதறி அடிக்க, உடனடியாக ஹீதலை மீட்டு மருத்துவமனையிலும் அவர்கள் சேர்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மணப்பெண் ஹீதலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
Images are subject to © copyright to their respective owners.
இதனை அறிந்து மணமக்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். அதே வேளையில் திருமண நாளில் இப்படி நடந்ததால் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமலும் அவர்கள் யோசித்துள்ளனர். அப்போது உறவினர்கள் அனைவரும் திருமணம் நின்று விடாமல் நடக்க வேண்டும் என்றும் கூறி, பெண் வீட்டாரிடம் பேசி மணப்பெண் ஹீதலின் தங்கையை மணமகன் விஷாலுக்கு திருமணம் செய்து வைக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதற்கு ஹீதல் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவிக்க, இறந்த மணப்பெண் ஹீதல் உடல் குளிர் பெட்டியில் பாதுகாக்கப்பட்டு விஷால் மற்றும் ஹீதல் சகோதரி ஆகியோரின் திருமணமும் நடந்துள்ளது. திருமணத்திற்கு பின்னர் ஹீதலின் இறுதி சடங்கு நடைபெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
Also Read | LEO விமான பயணத்தில் விஜய்.. கூட யார் இருக்காங்கன்னு பாருங்க.. வைரல் Pic..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஒண்ணா சேர முடியாதுல்ல".. காதல் ஜோடி எடுத்த சோக முடிவு... சிலைகளுக்கு திருமணம் நடத்தி கண்ணீர் விட்ட குடும்பத்தினர்.!
- திருமணமான அன்றே கணவரை பற்றி தெரியவந்த பரபரப்பு உண்மை.! அதே நாளில் கொழுந்தனை 2வது திருமணம் செய்த இளம்பெண்..!
- தனியாக வாழ்ந்துவந்த பெண் சடலமாக மீட்பு.. ஆரம்பத்துல இருந்தே போலீசுக்கு உறுத்தலாக இருந்த விஷயம்.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..!
- "ஓட்டு போடுறோம்.. ஆனா யாரும் உள்ள வரக்கூடாது".. அரசியல் கட்சியினருக்கு தடை விதித்துள்ள கிராமம்.. பல வருஷமா இப்படித்தானாம்.!
- மனைவியுடன் சென்று அமித் ஷாவை சந்தித்த ரவீந்திர ஜடேஜா.. சந்திப்பு குறித்து வைரல் பதிவு!
- 1979 "மச்சு அணை உடைப்பு" விபத்திலேயே உயிர் பிழைத்த பெண்.. மோர்பி தொங்கு பால விபத்தில் உயிரிழந்த சோகம்.!
- 140 பேரை பலி கொண்ட குஜராத் கேபிள் பாலம்.. விபத்துக்கு சில மணி நேரம் முன்பே கணித்த நபர்.. பகீர் காரணம்!
- "நல்லா தான் ஆடிட்டு இருந்தாரு, திடீர்ன்னு".. ஒரே நொடியில் நடந்த துயரம்.. அதிர்ச்சி சம்பவம்!!
- 1000 டன்னுக்கும் மேல லோடு.. 448 டயர்கள்.. ட்ரக்-ல இருக்க பொருளுக்காக தான் இவ்ளோ போராட்டமே.. திகைக்க வைக்கும் பின்னணி..!
- திருமண நாளில் கூடி இருந்த உறவினர்கள்.. மாப்பிள்ளை'ய கூப்பிட போனப்ப தான் உண்மை தெரிஞ்சுருக்கு". கண்ணீர் விட்ட மணப்பெண்.. பரபரப்பு!!