கொரோனா 'உயிரிழப்பு' சதவிகிதத்தில்... மஹாராஷ்டிரா,'தமிழ்நாடை' பின்னுக்குத்தள்ளி... 'முதலிடம்' பிடித்த மாநிலம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா உயிரிழப்பு சதவிகிதத்தில் மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா மாநிலங்களை பின்னுக்குத்தள்ளி குஜராத் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது.

இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா மஹாராஷ்டிரா, தமிழ்நாடு மாநிலங்களில் அதிகளவில் பரவி வருகிறது. இதனால் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையில் கொரோனா உயிரிழப்பு சதவிகிதத்தில் குஜராத் மாநிலம் முதலிடம் பிடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்தியளவில் கொரோனா பாதிப்பில் முதல் இரண்டு இடங்களை பிடித்திருக்கும் மஹாராஷ்டிராவில் இதுவரை 97 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். தமிழ்நாட்டில் 11 பேர் பலியாகி இருக்கின்றனர். மஹாராஷ்டிராவில் 1142 பேரும், தமிழகத்தில் 1075 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். ஆனால் 198 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருக்கும் குஜராத்தில் 17 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்து இருக்கின்றனர்.

இதனால் அங்கு உயிரிழப்பு சதவிகிதம் 10.1% ஆக உள்ளது. அதற்கு அடுத்த இடத்தை 7.9% பஞ்சாப் மாநிலம் பிடித்துள்ளது. 3-வது இடத்தை மஹாராஷ்டிரா மாநிலம் பிடித்துள்ளது.அதே நேரம் நாட்டிலேயே முதன்முறையாக கொரோனா கண்டறியப்பட்ட கேரள மாநிலம் இறப்பு சதவிகிதத்தில் கடைசி இடத்தையும் தமிழ்நாடு, கேரளாவுக்கு முந்திய இடத்தையும்  பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்