‘200ml பாட்டில், மெழுகுவர்த்தி துண்டு’.. இந்த மாதிரி கொடூரத்த பாத்ததே இல்ல’.. இந்தியாவை உலுக்கிய பாலியல் வழக்கு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை செய்த எய்ம்ஸ் மருத்துவர்கள், இதுவரை தாங்கள் இந்தமாதிரி கொடூரமான வழக்கை கண்டதில்லை என தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் குடியா எனும் 5 வயது சிறுமி, தனது பக்கத்துவீட்டில் குடியிருந்த மனோஜ், பிரதீப் ஆகிய இருவரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த சம்பவம் நடைபெற்ற சுமார் 40 நிமிடங்களுக்குப் பின் சிறுமி மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 1 மாத சிகிச்சைக்குப்பின் சிறுமி வீடு திரும்பினார். சிகிச்சை முடிந்த சில நாட்களாக திரவ உணவுகளை மட்டுமே சிறுமியால் உட்கொள்ள முடிந்துள்ளது. மேலும் அந்தரங்க உறுப்பில் ஏற்பட்ட காயத்தால் சிறுநீர் கழிக்கவோ, மலம் கழிக்கவோ முடியாமல் பெரும் அவதிப்பட்டுள்ளார். இதனால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இயற்கை உபாதைகள் வெளியேற்றப்பட்டதாக சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சிறுமிக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள், தற்போது சிகிச்சை குறித்து தெரிவித்துள்ளனர். அதில், ‘சிறுமியின் உதடுகள், கண்ணம், தோள்பட்டை மற்றும் அந்தரங்க உறுப்புகளில் கடுமையான காயங்கள் இருந்தன. அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்றதற்கான காயங்களும் காணப்பட்டன. சிறுமியின் பிறப்புறுப்பில் 200 மிலி பாட்டிலும், சில மெழுகுவர்த்தி துண்டுகளும் கண்டெடுக்கப்பட்டன. இப்படியொரு காட்டுமிராண்டித்தனத்தை இதுவரை தாங்கள் கண்டதே இல்லை’ என மருத்துவர் தெரிவித்துள்ளனர்.

SEXUALABUSE, AIIMS, DOCTORS, GUDIYA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்