‘திட்டமிட்ட மாதிரி நடக்கல’.. அதிகாலை விண்ணில் பாய்ந்த ‘GSLV-F10’ ராக்கெட்.. இஸ்ரோ தலைவர் அதிர்ச்சி தகவல்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

விண்ணில் செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட் தோல்வியில் முடிந்ததாக இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.

இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல், கனிமவியல், பேரிடர் எச்சரிக்கை, ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக ‘ஈஓஎஸ்-03’ (EOS-3) என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்தது. 2,268 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட்டில் பொருத்தப்பட்டது.

இதனை அடுத்து ராக்கெட்டுக்கு உந்து சக்தியாக உள்ள எரிபொருள் நிரப்பும் பணி நடைபெற்றது. தொடர்ந்து ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 14 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று பிற்பகல் 3.43 மணிக்கு தொடங்கியது. முன்னதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் ராக்கெட் மற்றும் செயற்கைகோள்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று (12.08.2021) அதிகாலை 5.43 மணிக்கு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த நிலையில் ராக்கெட் திட்டமிட்ட பாதையில் பயணித்த நிலையில், கிரையோஜெனிக் என்ஜின் பகுதியில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் திட்டம் முழுமை பெறவில்லை என தெரிவித்த இஸ்ரோ தலைவர் சிவன், பயணம் தோல்வியில் முடிந்ததுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்