அப்போ கூட ‘பாராசூட்’ யூஸ் பண்ணல.. ‘அசாத்திய துணிச்சல்’.. க்ரூப் கேப்டன் வருண் சிங் பற்றி வெளியான ‘சிலிர்க்க’ வைக்கும் தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட ஒரே நபர் குரூப் கேப்டன் வருண் சிங் தான்.
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உட்பட 13 பேர் நேற்று குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இதில் குரூப் கேப்டன் வருண் சிங் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்தார். இவருக்கு வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் உயர் சிகிச்சைக்காக பெங்களூருவிலுள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
உத்திரபிரதேச மாநிலத்தின் தேவரியா மாவட்டத்தை சேர்ந்தவர் கேப்டன் வருண் சிங். இவரது தந்தை கிருஷ்ண பிரசாத் இந்திய ராணுவத்தில் கர்னலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரும் சிங் துணிச்சலான ஒரு காரியத்தை செய்தார். இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் அப்போது ஒரு அறிக்கை வெளியிட்டது.
அதில், ‘வருண் சிங் ஒரு போர் விமானத்தை பயிற்சி ஓட்டத்திற்காக ஈடுபடுத்தி இருந்தார். பரிசோதனை அடிப்படையில் அந்த போர் விமானத்தை ஓட்டிக் கொண்டிருந்த போது விமானி அமரும் அறையில் காற்றழுத்த கட்டுப்பாடு செயலிழந்தது. விமானம் மிக உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது இந்த இக்கட்டான சிக்கலை வருண் சிங் எதிர்கொண்டார். நெருக்கடியான சூழலிலும் பிரச்சனையை சரியாக கண்டறிந்து விமானம் பறக்கும் உயரத்தை குறைத்தார். இந்த சமயத்தில் போர் விமானம் தனது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழத் தொடங்கியது.
உயிருக்கு ஆபத்தான, உடல் மற்றும் மன அழுத்தம் மிகுந்த சூழலிலும் துணிச்சலோடு செயல்பட்டு விமானத்தை மீண்டும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது மீண்டும் அதன் கட்டுப்பாட்டை இழந்தது. இப்படியான ஒரு சூழலில் போர் விமானி விமானத்தை கைவிட்டுவிட்டு பாராசூட் மூலம் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு சுதந்திரம் உள்ளது.
ஆனாலும் துணிச்சலுடன் செயல்பட்டு மீண்டும் விமானத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பத்திரமாக தரை இறங்கினார். இதன்மூலம் விமானப்படைக்கு சொந்தமான விமானம் சேதமின்றி காப்பற்றப்பட்டது. வருண் சிங்கின் இத்தகைய துணிச்சலை பாராட்டும் வகையில் 2021 வருட சுதந்திர தினத்தன்று குடியரசுத் தலைவரால் ஷௌர்ய சக்ரா பட்டம் வழங்கப்பட்டது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- காலையில கூட 'வீடியோ கால்' பண்ணி பேசுனீங்களே...! 'ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த 27 வயது வீரர்...' - கதறும் குடும்பம்...!
- ஹெலிகாப்டர் விபத்து : உடல்களுடன் சென்ற அமரர் ஊர்தி.. விபத்தில் சிக்கிய பாதுகாப்பு வாகனம்...!
- எப்படி ஒவ்வொரு உடலையும் 'அடையாளம்' கண்டுபிடிச்சாங்க...? - பரபரப்பு தகவல்...!
- கிடைத்தது 'கருப்பு' பெட்டி...! கடைசி நேரத்துல என்ன பேசியிருப்பாங்க...? - தெரியப்போகும் உண்மைத் தகவல்கள்...!
- 'பிபின் ராவத் மனைவி மதுலிகா ராவத்..' யார் இவர்? 'உருகும் ராணுவ குடும்பங்கள்...' - என்ன செய்தார்?
- ஒரே மாதிரியான இரு மரணங்கள்! பிபின் ராவத் போலவே தைவான் ராணுவ தளபதியும் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் தான் இறந்தார்!
- எம்ஐ-17வி5 ரக ஹெலிகாப்டர்கள் 'ஆக்சிடன்ட்' ஆகுறது இது 'முதல்' தடவ இல்ல...! - வெளிவந்துள்ள பல 'ஷாக்' தகவல்கள்...!
- ‘அப்பா பணியாற்றிய அதே பிரிவு’.. முதல் முப்படை தலைமை தளபதி.. மறைந்த பிபின் ராவத்தின் பின்னணி என்ன..?
- முப்படை தலைமை தளபதி ‘பிபின் ராவத்’ மரணம்.. ராணுவத் தளத்தின் வருகை பதிவேட்டியில் ‘முதல்வர்’ எழுதிய உருக்கமான இரங்கல் பதிவு..!
- ‘கடைசியா ஊருக்கு வந்தது அன்னைக்குதான்’.. ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி.. வெளியான உருக்கமான தகவல்..!