"பழைய பீரோவை வரதட்சணையா கொடுக்குறாங்க".. தாலி கட்ட மறுத்த மாப்பிள்ளை.. மணப்பெண் அதிரடி முடிவு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஹைதராபாத்தில் பழைய பொருட்களை வரதட்சணையாக கொடுத்ததாக கூறி திருமணத்தை மாப்பிள்ளை வீட்டினர் புறக்கணித்திருக்கின்றனர். இதனால் அப்பகுதியே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | இன்ஸ்டா தோழிக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட்.. இளைஞர் போட்ட பிளான்.. கையோட கூட்டிட்டு போன போலீஸ்..!
திருமணத்தின்போது வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என சட்டம் இயற்றப்பட்டு இருந்தாலும் கள எதார்த்தம் அப்படி இல்லை. இன்னும் பல இடங்களில் வரதட்சணை காரணமாக பெண்கள் பாதிப்புகளை சந்தித்து தான் வருகின்றனர். இதனை தடுக்க, பல்வேறு விதங்களில் அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அந்த வகையில் ஹதராபாத்தில் பழைய பொருட்களை வரதட்சணையாக கொடுத்ததாக கூறி மணமகன் திருமணத்திற்கு வராமல் இருந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம், ஹதராபாத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. மாப்பிள்ளை பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இருதரப்பு வீட்டிலும் கல்யாண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வந்திருக்கின்றன. இந்த சூழ்நிலையில் மணமகனுக்கு கட்டில், மெத்தை, பீரோ உள்ளிட்ட வரதட்சணை பொருட்களை கொடுப்பதாக மணமகள் வீட்டார் தெரிவித்திருக்கின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி இவர்களது திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் திருமணத்திற்கு மணமகனுடைய வீட்டார் வராததால் பதற்றம் அடைந்த பெண்ணின் தந்தை அவர்களுக்கு போன் செய்திருக்கிறார். அப்போது வரதட்சணையாக கொடுக்கப்பட்ட பீரோ, கட்டில், மெத்தை அனைத்தும் பழைய பொருட்கள் போல இருப்பதாகவும் அதனால் தங்களுக்கு இந்த திருமணத்தை விருப்பம் இல்லை எனவும் மணமகன் தெரிவித்ததாக தெரிகிறது. இதனை அடுத்து மணப் பெண்ணின் தந்தை நேரடியாக சென்று பேசியிருக்கிறார். அப்போதும் மணமகன் திருமணத்திற்கு வர மறுத்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் திருமணம் நின்று போகவே மணமகளின் அறிவுரைப்படி அவரது வீட்டினர் இது குறித்து காவல் துறையில் புகார் அளித்திருக்கின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
மணமகளின் தந்தை இதுகுறித்து பேசுகையில், "மணமகன் தரப்பில் கேட்ட பொருட்களை வரதட்சணையாக கொடுக்கவில்லை எனவும் பர்னிச்சர் பழையதாக இருந்தது எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர். திருமண ஏற்பாடுகள் எல்லாமே முடிவடைந்த நிலையில் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் திருமணத்திற்கு வந்து விட்டனர். ஆனால் மணமகன் திருமணத்திற்கு வரவில்லை" என கவலையுடன் தெரிவித்து இருக்கிறார்.
இந்த நிலையில் இது குறித்து காவல்துறையினர் பேசுகையில்,"மணமகனின் குடும்பத்தினர் பர்னிச்சர் உள்ளிட்ட பொருட்களை வரதட்சணையாக கேட்டனர் எனவும் ஆனால் பயன்படுத்திய பர்னிச்சர்களை வரதட்சணையாக கொடுத்ததாக கூறி மணமகன் குடும்பத்தினர் திருமண நாள் அன்று வரவில்லை என்றும் புகாரளிக்கப்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் வரதட்சனை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது" என தெரிவித்துள்ளனர்.
Also Read | தனக்குத்தானே 1000 ரூபாய் அபராதம் விதித்துக்கொண்ட பாமக நிறுவனர் ராமதாஸ்.. பின்னணி என்ன?
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- துருக்கி நிலநடுக்கம்: காப்பாற்றியவரை விட்டு இறங்க மறுத்த பூனை.. நெகிழ வைக்கும் வீடியோ..!
- கல்யாணம் முடிச்சு ரயில் ஏறிய புதுமண தம்பதி.. பாதியிலேயே மணமகள் போட்ட பக்கா பிளான்.. கலங்கிப்போன மாப்பிள்ளை..!
- கையில் பேனரோட திருமண ஜோடியை வழிமறிச்ச 7 பெண்கள்.. "மாப்பிள்ளை முகம் எல்லாம் வேர்த்து போச்சு"!!
- கல்யாணம் நெருங்கிய நேரத்துல நடந்த அசம்பாவிதம்.. "விடுறா வண்டிய ஹாஸ்பிடலுக்கு".. மாலையும், தாலியுமா கிளம்பிய மாப்பிள்ளை..
- தஞ்சாவூரு பையன்.. கஜகஸ்தான் பொண்ணு.. தமிழ் முறைப்படி நடந்த திருமணம்..!
- மேடையில் தள்ளாடிய மாப்பிள்ளை.. மணப்பெண் எடுத்த முடிவு.. சோகத்தில் முடிந்த கல்யாணம்..!
- "கல்யாணத்துக்கு விமானத்துல தான் போறோம்".. மொத்த டிக்கெட்டையும் புக் செய்த மணமகன்.. வைரலாகும் வீடியோ..!
- மருத்துவராகும் கனவு.. திருமணம் முடிந்த அடுத்த நிமிஷமே லேப் கோட்டுடன் தேர்வுக்கு போன புதுமணப்பெண்.. வீடியோ..!
- என்னை விட்டு போகாத.. மணப்பெண்ணின் சேலையை பிடித்து போராடிய பாசமான நாய்.. நெகிழ்ச்சி வீடியோ..!
- மாப்பிள்ளை செயலால்.. கல்யாணம் முடிஞ்ச கையோட ஃபயர் ஸ்டேஷன் போன ஜோடி.. வைரலாகும் பின்னணி!!