'இங்கையுமா'?...'மணமேடையில வச்சு இப்படி செஞ்சிட்டீங்களே 'மாப்பிள்ள'...வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருமண நாளன்று வந்திருக்கும் உறவினர்கள்,நண்பர்கள் என பலரையும் கவனிக்கும் பொறுப்பு மணமகன் மற்றும் மணமகள் வீட்டாருக்கு இருக்கும்.அதே போன்று மணமகனும் அதை போன்ற பரபரப்புடனே இருப்பார்.ஆனால் இந்த மணமகனோ தன்னுடைய திருமணத்தின் போதே,மணமேடையில் அமர்ந்து கொண்டு பப்ஜி விளையாடியது பலரது புருவதையும் உயர்த்தியுள்ளது.
இன்றைய இளைய தலைமுறையினர் அதிகமாக அடிமையாகி இருக்கும் இரண்டு விஷயம்,பப்ஜி விளையாட்டு மற்றும் டிக் டாக்.இந்த இரண்டிற்கும் தடை விதிக்க வேண்டும் என,பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.பப்ஜி விளையாட்டில் அடிமையாகி இருக்கும் இளைஞர்கள் மற்ற செயல்களில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள முடியாத அளவிற்கு அதில் அடிமையாகி இருக்கிறார்கள். இதனால் அவர்களின் எதிர்காலம் அதிகமாக பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக,பெற்றோர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.அதோடு அவர்களின் உடல்நிலையும் அதிக பாதிப்பிற்கு ஆளாவதாக மிகுந்த மனவேதனைஅடைகிறார்கள்.
பெற்றோர்கள் இவ்வாறு கவலையில் இருக்க 'தன்னுடைய திருமணத்தின் போதே மணமேடையில் அமர்ந்து கொண்டு மணமகன் பப்ஜி விளையாடும் வீடியோ' வைரலாக பரவி வருகிறது.அந்த வீடியோவில் மணமேடையில் அமர்ந்து கொண்டு மணமகன் பப்ஜி விளையாடுகிறார்.அதனை அருகில் இருக்கும் அவரது மனைவியான மணப்பெண் பார்த்து கொண்டிருக்கிறார்.இதனிடையே ஒருவர் அன்பளிப்பு வழங்க,அதனை தட்டிவிடும் மணமகன் மீண்டும் பப்ஜி விளையாட்டை தொடர்கிறார்.
இதில் உண்மையிலயே மணமகன் இவ்வாறு நடந்து கொண்டாரா அல்லது டிக் டாக்குக்காக நடித்து எடுக்கப்பட்ட வீடியோவா என்பது குறித்து தெரியவில்லை.ஆனால் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தேர்தல் நன்னடத்தை விதிகளுக்காக, பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் செய்துள்ள ‘அதிரடி’ காரியம்!
- 'இதுல மட்டும்தான் இன்னும் ஆதார இணைக்கல.. இப்போ அதுக்கும்’ .. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
- 'எப்ப பாரு குத்துடா,கொல்லுடாண்ணு இருக்கான்'...'கொந்தளித்த பெற்றோர்'...வந்தது அதிரடி தடை!
- அரசியல் பதிவு போட்டவரின் வீட்டுக்கே சென்று பேஸ்புக் அதிகாரிகள் சோதனையா?
- ‘அனுப்புனது பில்லுதான்.. ஆட்டய போட்டது ரூ.800 கோடி’.. எங்க போய் கைவெச்சிருக்காரு பாருய்யா!
- 'போலீஸை வச்சு ஏன் மிரட்டுறீங்க'?...பரபரப்பை கிளப்பியிருக்கும்...'கவர்னர் பேத்தியின்' வீடியோ!
- 687 பக்கங்களை நீக்கியது ஃபேஸ்புக்! தேர்தலை முன்னிட்டு நடவடிக்கை...
- இணையத்தில் கட்டுப்பாடு வேண்டும்... அதிரடி அறிக்கை... சொல்வது யார்?
- பப்ஜிக்கு அடிமையான மாணவர்.. கல்லூரித்தேர்வில் செய்த பரபரப்பு காரியம்!
- ‘பக்கத்துல போலீஸ் வந்தது கூட தெரியாம பப்ஜி’.. 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது!