'திபு திபுவென கல்யாண மண்டபத்திற்கு வந்த இளம்பெண்'... 'அவரை பார்த்து வேர்த்து விறுவிறுத்து போன புது மாப்பிள்ளை'... அடுத்த நாள் திருமணத்தில் நடந்த பெரிய ட்விஸ்ட்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் பைதி பைந்தூர்நாலா கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன். இவருக்கும் சிருங்கேரியைச் சேர்ந்த சிந்து என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. அவர்களின் திருமணம் சிருங்கேரியில் நேற்று நடக்க இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் இருவீட்டாரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டார்கள்.
இந்நிலையில் திருமண வரவேற்பு முடிந்து அனைவரும் ஓய்வு எடுக்க அவரவர் அறைக்குச் சென்று விட்டார்கள். மணமகன் நவீன் தனது அறைக்கு ஓய்வு எடுக்கச் சென்றுள்ளார். அப்போது திடீரென அவரை பார்க்க இளம்பெண் ஒருவர் அதிரடியாக வந்துள்ளார். அந்த இளம்பெண்ணைப் பார்த்ததும் புதுமாப்பிள்ளை நவீன் வேர்த்து விறுவிறுத்துப் போனார். அவர் புதுமாப்பிள்ளை நவீனின் முன்னாள் காதலி ஆவார்.
அந்த இளம்பெண் திருமண மண்டபத்திற்கு வருவார் எனச் சிறிதும் நினைக்காத நவீன் என்ன செய்வது எனப் புரியாமல் தவித்து நின்றுள்ளார். அப்போது அந்த இளம்பெண், ''என்னைக் காதலித்து விட்டு எப்படி வேறொரு பெண்ணை உன்னால் திருமணம் செய்ய முடியும் எனக் கேட்டுள்ளார். அதோடு என்னை ஏமாற்றிவிட்டு திருமணம் செய்துகொண்டால், நாளை காலை மண்டபத்துக்கு வந்து அனைவர் முன்னிலையிலும் உண்மையைக் கூறி திருமணத்தை நிறுத்திவிடுவேன்'' என்று மிரட்டி உள்ளார்.
இதனால் பயந்துபோன நவீன் அந்த பெண்ணுடன் நேற்று முன்தினம் இரவே திருமண மண்டபத்திலிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை திருமணத்துக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது. உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் திருமணத்துக்காக மண்டபத்துக்கு வந்தனர். தாலி கட்டும் நேரமும் நெருங்கி வந்தது. ஆனால் மாப்பிள்ளை நவீன் மணிமேடைக்கு வரவில்லை. இதையடுத்து அவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவரது அறைக்குச் சென்று பார்த்துள்ளார்கள்.
அப்போது தான் முன்தினம் இரவு நடந்த அனைத்தும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தால் என்ன செய்வது எனத் தெரியாமல் மணமகனின் பெற்றோர் தவித்து நின்ற நிலையில், மணமகள் என்ன நடக்கிறது எனத் தெரியாமல் மணிமேடையில் பரிதாபமாக இருந்துள்ளார். இதனால் திருமணம் நிற்கும் நிலைக்குச் சென்ற நிலையில், அங்குத் திருமணத்துக்கு வந்திருந்த சிருங்கேரி தாலுகா நந்திக் கிராமத்தைச் சேர்ந்த சந்துரு என்பவர் சிந்துவைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி முன்வந்தார்.
இதனால் பெண் வீட்டார் நிம்மதி அடைந்தனர். இதையடுத்து அதே முகூர்த்தத்தில் மணப்பெண் சிந்துவை, சந்துரு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு வந்த அனைவரும் மணமக்களை வாழ்த்திச் சென்றனர். மாப்பிள்ளையான சந்துரு, சிக்கமகளூருவில் அரசு பேருந்து நடத்துநராக வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'டேட்டிங் ஆப்பில் இளம்பெண் வச்ச கோரிக்கை'... 'ஒரு செகண்ட் யோசிக்காமல் இளைஞர் கொடுத்த போஸ்'... 'உடனே வந்த மெசேஜ்'... ஐடி இளைஞரை கதிகலங்க வைத்த இளம்பெண்கள்!
- டேஞ்சரில் சிக்க வைத்த டேட்டிங் செயலி... வீடியோ காலில் தோன்றிய பகீர் உருவம்!.. பக்கா ஸ்கெட்ச்!.. வசமாக மாட்டிய ஐடி ஊழியர்!
- பெத்த தாயோட உசுரு... 'எப்படி காப்பாத்த போறேன்னு தெரியல'!.. திடீரென மகள் எடுத்த அதிரடி முடிவு!.. இதயத்தை ரணமாக்கும் பாசப் போராட்டம்!!
- விடிஞ்சா ‘கல்யாணம்’.. திருமணக் கோலத்தில் வந்த ‘மணப்பெண்’.. பாவம் யாருக்கும் இந்த ‘நிலைமை’ வரக்கூடாது.. நொறுங்கிப் போன குடும்பம்..!
- சசிகலா விடுதலை குறித்து... பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம் 'அதிரடி' அறிவிப்பு!.. 'ரிலீஸ் 'இப்படி' தான் இருக்கும்!'
- Video: 'ஒரு பக்கம் பிடித்து இழுத்து வெளியேற்றம்'.. 'இன்னொரு பக்கம் அமரவைக்க முயற்சி!'.. துணை சபாநாயகருக்கு நடந்தது என்ன?.. ‘அமளி துமளி’ சம்பவம்!.. பரவும் வீடியோ!
- எங்கள சேர்த்து வச்சது 'இது' தான்!.. ஹனிமூன் டிரிப்-ஐ கேன்சல் பண்ணிட்டு... புதுமண தம்பதி செய்த தரமான சம்பவம்!.. வாயடைத்து போன ஊர் மக்கள்!
- ‘முகூர்த்த நேரத்திற்கு முன்னதாக கிடைத்த தகவல்’... ‘ஆனாலும் உறுதியாக இருந்த மணமக்கள் குடும்பத்தினர்’... ‘கடைசியில் நடந்த திருப்பம்’...!!!
- '10 ரூபாய் Coins இருக்கா உங்ககிட்ட???'... 'புது மாதிரியான Offerஆல் குவியும் வாடிக்கையாளர்கள்!!!'... 'உணவக உரிமையாளர் சொன்ன அசத்தல் காரணம்!'...
- VIDEO: 'இத புடிங்க மாப்பிள்ளை... கிஃப்ட் எப்படி இருக்கு'?.. திருமணத்தில் மருமகனுக்கு மாமியார் கொடுத்த அதிர்ச்சி பரிசு!.. பொண்ணோட ரிப்ளை தான் ஹைலைட்!