2 நாட்களில் 'இறந்து' போன புது மாப்பிள்ளை... உண்மையை 'மறைத்த' பெற்றோரால்... அடுத்தடுத்து '111 பேருக்கு' காத்திருந்த அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருமணமான 2 நாட்களில் புது மாப்பிள்ளை இறந்து போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பீஹார் மாநிலம் பாட்னா அடுத்த பாலிகஞ்ச் பகுதியை சேர்ந்த 30 வயதான சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த ஜூன் 15-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த 2 நாட்களில் மணமகன் இறந்து போயுள்ளார். அவருடைய பெற்றோர் அதிகாரிகளுக்கு எந்த தகவலும் அளிக்காமல் அவரது உடலை தகனம் செய்து விட்டனர்.
இதனால் அவருக்கு கொரோனா இருந்ததா? என்பதை அதிகாரிகளால் கண்டறிய முடியவில்லை. இதுகுறித்து போலீசார் கூறுகையில், மே 12-ம் தேதி மணமகன் கொரோனா அறிகுறிகளுடன் தன்னுடைய கிராமத்திற்கு திரும்பியுள்ளார். ஆனால் அவரது குடும்பத்தினர் அதுகுறித்து கவலை இல்லாமல் திருமண ஏற்பாடுகளை செய்துள்ளனர். திருமணம் முடிந்த 2 நாட்களில் மணமகன் உடல்நிலை மோசமடைந்து உள்ளது. இதையடுத்து அருகில் இருந்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவரது பெற்றோர்கள் அவரை கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இதையறிந்த அதிகாரிகள் திருமண நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய இதுவரை 111 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. ஆனால் மணப்பெண்ணுக்கு கொரோனா இல்லை. திருமண நிகழ்வில் 50 பேருக்கு மேல் பங்கேற்றது, மணமகன் இறந்ததை அதிகாரிகளிடம் இருந்து மறைத்து தகனம் செய்தது போன்றவற்றால் குடும்பத்தினர் விதிமீறலில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா...' 'தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக...' - மருத்துவ நிர்வாகம் அறிக்கை...!
- சென்னையில் ஒரே நாளில் 2,393 பேருக்கு கொரோனா!.. மதுரையில் மேலும் 257 பேருக்கு தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- தமிழகத்தில் இன்று 60 பேர் பலி!.. 90 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை!.. முழு விவரம் உள்ளே!
- “கொரோனோ நோயாளி இறந்துட்டாரு...14 லட்சம் பில் கட்டுங்க!” - ஷாக் கொடுத்த மருத்துவமனை!
- கொரோனா வடிவில் கொட்டித்தீர்த்த 'பனிக்கட்டி' மழை... 'அச்சத்தில்' உறைந்த மக்கள்... எங்கேன்னு பாருங்க!
- '80 காவலர்கள் பணியிலிருந்து விடுவிப்பு'... 'அதிரடி நடவடிக்கை'... 'டிஐஜி' முன்னெடுத்துள்ள புதிய முயற்சி!
- ‘58 பேருக்கு கொரோனா’.. ஒரே துக்க நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் பரபரப்பான பரிசோதனை முடிவுகள்!
- ‘லத்தியால் அடித்ததாக நேரடி சாட்சி வாக்குமூலம்!’.. சாத்தான்குளம் சம்பவத்தில் மாஜிஸ்திரேட் அறிக்கையால்.. பரபரப்பு திருப்பம்!
- 'தூத்துக்குடி எஸ்.பி அருண் பாலகோபாலன் மாற்றம்'... 'புதிய எஸ்.பி நியமனம்'... தமிழக அரசு உத்தரவு!
- நடுரோட்டில் வைத்து 'முதியவரை' அறையும் காவலர்.. சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ!