'முகூர்த்தத்துக்கு வர சொன்னா.. இத்தன மணிக்கா வருவாங்க?'.. 'இப்ப என்ன ஆச்சு பாருங்க'.. மாப்பிள்ளைக்கு வந்த சோதனை!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தரப் பிரதேசம் மாநிலம் பிஜ்னோர் பகுதியில் 6 வாரங்களுக்கு முன்னால், இளம் ஜோடிக்கு நடந்த திருமணத்தில் சடங்குகள் சரியாக நடத்தப்படாத குறையை தீர்க்க, நேற்று முன் தினம் மீண்டும் முறைப்படி திருமணம் நடத்த வேண்டுமென முடிவெடுத்தனர்.

இந்த முடிவின் காரணமாக மணப்பெண் புகுந்த வீட்டுக்கு செல்லவில்லை. மேலும் முதலில் நடந்த திருமணத்தின்போது வரதட்சணை கேட்காத மணமகன் தரப்பு, இம்முறை பைக் மற்றும் பணத்தை கேட்டதால் இரு குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் எழுந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த மணமகள் தரப்பினர், மணமகன் மற்றும் அவரது வீட்டாரை ஒரு அறையில் வைத்து அடைத்துவைத்து பின்பு வெளிவிட்டனர்.

பின்னர் திருமணத்துக்கு மாப்பிள்ளை வருவார் என மணமள் வீட்டார் எதிர்பார்த்துள்ளனர். ஆனால் மதியம் 2 மணிக்கு வரவேண்டிய மாப்பிள்ளையோ, நள்ளிரவில்தான் வந்துள்ளார். இவ்வளவு தாமதமாக வந்த மாப்பிள்ளைக்கு காத்திருந்ததோ அதிர்ச்சி. ஆம், மணமகள் வீட்டாரோ, உள்ளூரில் யாரையோ ஒருவரை மணமகளுக்கு திருமணம் செய்துவைத்தனர்.

இதனால் பழைய மாப்பிள்ளை வீட்டாருக்கும், மணமகள் வீட்டாருக்கும் மாறி மாறி ஏற்பட்ட தகராறினால், இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்துள்ளனர். போலிஸாரோ இந்த புகாரை எடுத்துக்கொள்ளாமல், வாய்வழியாக விசாரித்து இந்த பிரச்சனையை அணுகி, தீர்க்க முயன்று வருகின்றனர்.

WEDDING, MARRIAGE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்