திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு.. மணமகள் அனுப்பிய மெசேஜ்!!.. அடுத்த நிமிஷமே கல்யாணம் வேணாம்ன்னு முடிவு எடுத்த வாலிபர்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இன்றைய காலகட்டத்தில் நம்மை சுற்றி நடக்கும் ஏராளமான விஷயங்கள், அதிகம் வைரல் ஆவதை நாம் கேள்விப்பட்டிருப்போம்.

  Represent Image  © Copyright to their respect Owners.

Advertising
>
Advertising

அதிலும் குறிப்பாக, திருமணத்தை சுற்றி நடைபெறும் பல விஷயங்கள் இன்று இணையத்தில் அதிக பேசு பொருளாக மாறும்.

அது மட்டுமில்லாமல், திருமணத்திற்காக தயார் செய்யும் விஷயங்களை கூட ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்வார்கள். உதாரணத்திற்கு திருமண பத்திரிக்கைகளை வித்தியாசமாக தயார் செய்வது, போட்டோஷூட்களை புதுமையை புகுத்தி எடுப்பது என எந்த விஷயமாக இருந்தாலும் பலரது மத்தியில் கவனம் ஈர்க்கும் வகையில் பார்த்து பார்த்து தயார் செய்கிறார்கள்.

இப்படி எதிர்பார்த்து செய்யும் விஷயங்கள் வைரலாவது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் திருமணத்தைச் சுற்றி நடைபெறும் எதிர்பாராத சம்பவங்கள் அதிக பரபரப்பை மக்கள் மத்தியில் உண்டு பண்ணும். சமீபத்தில் கூட, திருமண மேடையில் மாப்பிள்ளை மருமகளுக்கு முத்தம் கொடுத்ததால் அந்த பெண் திருமணத்தை வேண்டாம் என வைத்தது, குடித்துக் கொண்டு மாப்பிள்ளை மேடை ஏறியதால் மணப்பெண் திருமணத்தை நிறுத்தியது என பல எதிர்பாராத சம்பவங்கள் திருமணமாக போகும் சமயத்தில் கூட அரங்கேறும்.

அப்படி ஒரு சூழலில் திருமணத்திற்கு முன்பாக மணமகள் அனுப்பிய மெசேஜை பார்த்து மாப்பிள்ளை எடுத்த முடிவு தொடர்பான செய்தி தற்போது அதிக பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.

கவுகாத்தி பகுதியைச் சேர்ந்த பொறியாளர் ஒருவருக்கும், ஹவுலி நகரை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் செய்ய சமீபத்தில் நிச்சயிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அவர்களுக்கு இடையே திருமணம் நிச்சயம் ஆனதும் தங்களின் செல்போன் எண்களை மாற்றிக் கொண்டு பேசவும் ஆரம்பித்துள்ளனர். அப்படி ஒரு சூழலில் தனது வருங்கால மனைவிக்காக சில பரிசுகளை அந்த வாலிபர் அனுப்பி வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும் அதில் ஷாம்பூ உள்ளிட்ட சில பொருட்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனைப் பார்த்ததும் அந்த மணப்பெண் திருமணத்துக்கு முந்தைய நாள் இரவு குறுஞ்செய்தி ஒன்றை மாப்பிள்ளைக்கு அனுப்பி உள்ளார். அதில், 'ஒரு பொறியாளராக இருந்து கொண்டு மலிவான ஷாம்பூவை அனுப்பி வைத்துள்ளீர்களே' என மாப்பிள்ளையை குறிப்பிட்டு அந்த பெண் மெசேஜ் அனுப்பியதாக தகவல்கள் கூறுகின்றது. வருங்கால மனைவி என கருதிய பெண்ணிடம் இருந்து வந்த இந்த மெசேஜ், அந்த வாலிபரை அவமானப்பட்டது போல உணர வைத்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக இந்த திருமணம் வேண்டாம் என்றும் அவர் பதில் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனை கண்டதும் அதிர்ச்சியடைந்த அந்த மணப்பெண், தனது பெற்றோரிடம் இது பற்றி கூற உடனடியாக அனைவரும் சென்று மாப்பிள்ளையை சமாதானம் செய்ய முயன்றதாகவும் தெரிகிறது. ஆனாலும் அவர் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளாத ஒரு சூழலில் இது தொடர்பாக போலீஸ் நிலையத்திலும் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

மலிவான ஷாம்பூ வாங்கி அனுப்பியதாக வருங்கால மனைவி அனுப்ப மெசேஜ் பார்த்து திருமணத்தை நிறுத்த இளைஞர் முடிவெடுத்த நிலையில், இது தொடர்பாக போலீசாரும் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.

MARRIAGE, BRIDE, GROOM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்