"தாத்தா 15 வருஷம் ஜெயில்".. "பாட்டிய 32 முறை சுட்டாங்க".. "அப்பா...".. நாடாளுமன்றத்தில் Rahul Gandhi உருக்கம்.
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லி, 03, பிப்ரவரி 2022:- அண்மையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-2023 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார்
400 வந்தே பாரத் ரெயில், 5 ஜி வசதி, டிஜிட்டல் கரன்சி, ஒரே நாடு-ஒரே பத்திரப்பதிவு, நதிகள் இணைப்பு, இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு, இ-பாஸ்போர்ட், நெடுஞ்சாலை திட்டம் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. இத்துடன் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, தற்சார்பு தான் இந்தியாவை வலுவாக்கும் என்றும் அண்டை நாடுகள் நம்மை வலிமையுள்ள நாடாக பார்க்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் பட்ஜெட்
மேலும் இந்த பட்ஜெட் தொடர்பாக பேசியிருந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்த பட்ஜெட் நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்றும், நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதிக உள்கட்டமைப்பு, அதிக முதலீடு, அதிக வளர்ச்சி, அதிக வேலைகள் எனும் ஒரு கொள்கையை இந்த பட்ஜெட் பின்தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2 இந்தியாக்கள்..
இந்நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அடுத்த நாள், நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் பேசிய உரையில் பேசப்படாத சிலவற்றை தான் பேச நினைப்பதாக கூறி ராகுல் காந்தி பேசத் தொடங்கினார். அவர் பேசும்போது, “இப்போது 2 இந்தியாக்கள் உள்ளன.. ஒன்று ஏழைகளுக்கு, மற்றொன்று பணக்காரர்களுக்கு என்று 2 இந்தியாக்கள் உள்ளன” என்று கூறினார்.
தமிழ்நாட்டு மக்களை ஆளவே முடியாது
மேலும் பேசிய ராகுல், சிறு, குறு தொழில்களை ஆதரிக்கவில்லை. எனவே மேட் இன் இந்தியாவை அழித்துவிட்டீர்கள். இந்திய உற்பத்தி வேலைகள் 46% வீழ்ச்சியாகியுள்ளது. ஜம்மு & காஷ்மீர் மற்றும் நம் வெளியுறவுக் கொள்கையில் நாம் பெரிய தவறுகளை செய்துள்ளோம்.
நீங்கள் பாகிஸ்தானையும் சீனாவையும் ஒன்றாக இணைத்துவிட்டீர்கள். 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம். தமிழ்நாட்டின் நீட் விலக்கு கோரிக்கை குரல் இந்திய அரங்கில் எடுபடாமல் போகிறது. உங்களால் தமிழ்நாட்டு மக்களை ஆளவே முடியாது.” என்று பல்வேறு விஷயங்களை முன்வைத்தார்.
பாட்டி 32 முறை சுடப்பட்டார் .. தந்தைக்கு அடி விழுந்தது..
இப்படி தமது தாத்தா நேரு, தந்தை ராஜீவ் காந்தி, பாட்டி இந்திரா காந்தி உள்ளிட்டோர் குறித்து அந்த நாடாளுமன்ற உரையில் ராகுல் காந்தி பேசியுள்ளார். அதில், “எனது தாத்தா 15 ஆண்டுகள் சிறையில் இருந்தார். என் பாட்டி 32 முறை சுடப்பட்டார். என் தந்தைக்கு அடி விழுந்தது.
அதனால் நான் என்ன பேசுகிறேன் என்று எனக்குத் தெரியும். நீங்கள் மிக மிக ஆபத்தான ஒன்றைப் பற்றிப் பிதற்றுகிறீர்கள். அதை நிறுத்துமாறு நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். நீங்கள் நிறுத்தவில்லை என்றால், நீங்கள் ஒரு ஆபத்தான நிகழ்வை உருவாக்குவீர்கள்!” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அத நான் சொல்லணும்.. நீங்க யாரு?'.. RAHUL GANDHI-க்கு Lok Sabha தலைவர் பரபரப்பு பதில்!
- VIDEO: தமிழ்நாட்டைப் பத்தி ஏன் அதிகமாக பேசுனீங்க..? நிருபர் கேள்விக்கு ராகுல் காந்தியின் ‘நச்’ பதில்..!
- Rahul Gandhi: "வாழ்நாள் முழுசும் தமிழ்நாட்ட உங்களால ஆள முடியாது!".. பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி உரை வீச்சு!
- 'பெகாசஸ்' சர்ச்சை!.. ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோரையும் வேவு பார்த்தது அம்பலம்!.. தோண்ட தோண்ட வெளிவரும் பகீர் தகவல்கள்!
- 'அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வு'... 'ராகுல் காந்தியை சந்தித்த பிரசாந்த் கிஷோர்'... முக்கிய ஆலோசனை!
- ராமர் கோயிலுக்கு நிலம் வாங்கியதில் முறைகேடு?.. ரூ.2 கோடி மதிப்புள்ள நிலம்... 5 நிமிடத்தில் ரூ.16.50 கோடியாக மாறியது எப்படி?.. ராகுல் காந்தி கடும் தாக்கு!
- டிரெண்டிங் VIDEO: ”ஒரு பெரிய 'சுனாமியே' வரப்போகுது...!” - திடீரென வைரல் ஆகும் ’ராகுல் காந்தி’ பேசிய வீடியோ... என்ன காரணம்?!!
- 'ராகுலிடம் இருந்து வந்த போன் கால்'... 'அந்த சர்ப்ரைஸ் முடிவதற்குள், ராகுலிடம் இருந்து வந்த கொரியர்'... திக்குமுக்காடிப்போன சிறுவன்!
- ‘ஒரே ஒரு போட்டோ தான்’!.. வியந்துபோன நெட்டிசன்கள் கேட்கும் ஒரு கேள்வி.. ‘செம’ வைரலாகும் ராகுல்காந்தி போட்டோ..!
- ‘தமிழ்நாட்டிலேயே இதுதான் பெஸ்ட் டீ’!.. மாஸ்டரை பாராட்டிய ராகுல்காந்தி.. எங்கே தெரியுமா..?