ரொம்ப வருஷமா பாட்டி வீட்டுல இருந்த தேசிய கொடி.. எதேச்சயாக போட்டோ எடுத்து பகிர்ந்த குடும்பத்தினர்.. அப்பறம் தான் உண்மை தெரியவந்திருக்கு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வயதான பாட்டி ஒருவர் கிட்டத்தட்ட 40 வருடங்களாக பாதுகாத்து வந்த தேசிய கொடியை வெளியே எடுக்கப்போய், அதுபற்றிய உண்மை அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்திருக்கிறது. இதனால் மொத்த குடும்பமும் வியப்பில் ஆழ்ந்திருக்கிறது.

Advertising
>
Advertising

75வது சுதந்திர தின விழா

இந்தியாவில் நேற்று 75வது சுதந்திர தின விழா நேற்று முன்தினம் விமர்சியாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்தியா முழுவதும் பல்வேறு கலை நிகழ்சிகள் நடத்தப்பட்ட நிலையில், முதன் முறையாக ஒவ்வொருவரும் தங்களது வீட்டில் மூவர்ண கொடியை ஏற்ற அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் மக்கள் தங்களது வீட்டில் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின விழாவை கொண்டாடினர்.

பேத்தியின் ஆசை

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் கிரோன் ராஜ்ஹோவா. சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது, அவருடைய பேத்தி தனக்கு ஒரு தேசிய கொடி வேண்டும் எனக் கேட்டிருக்கிறார். அப்போதுதான் தனது வீட்டில் உள்ள பழைய அலமாரியில் வைக்கப்பட்டுள்ள கொடி பற்றிய ஞாபகம் வந்திருக்கிறது கிரோன் ராஜ்ஹோவாவிற்கு. உடனடியாக அலமாரியை திறந்து அந்த கொடியை வெளியே எடுத்திருக்கிறார் அவர்.

அப்போது இதனை பார்த்துக் கொண்டிருந்த கிரோன் ராஜ்ஹோவாவின் மருமகள் டோலி கோகோய் ராஜ்கோவா-விற்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால் அந்த கொடி தற்போதைய கொடி போலல்லாமல் வித்தியாசமாக இருந்திருக்கிறது.

உண்மை

பாட்டி வைத்திருந்த கொடியில் அசோக சக்கரத்திற்கு பதிலாக ராட்டை இருந்திருக்கிறது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அந்த கொடியை புகைப்படம் எடுத்து பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவு கொஞ்ச நேரத்திலேயே வைரலாகிவிட்டது. இதுபற்றி பேசிய கிரோன்,"இது நம் தேசத்தின் சொத்து. இதன் உண்மையான வயதை என்னால் கூற முடியாது. ஆனால், கடந்த 40 வருடங்களாக இந்த கொடியை நான் பத்திரப்படுத்தி வருகிறேன்" என்றார்.

மையத்தில் ராட்டையுடன் இருக்கும் இந்த கொடி 90 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. அசாமை சேர்ந்த சோனாரியில் உள்ள சருபதேர் கிராமத்தை சேர்ந்தவரான பொத்மேஷ்வர் ராஜ்கோவாவிடம் இந்த கொடி இருந்திருக்கிறது. சுதந்திர போராட்ட தியாகியான அவர் 1931 ஆம் ஆண்டில் இந்த கொடியை பயன்படுத்தியிருக்கிறார்.

இதுபற்றி பேசிய டோலி கோகோய் ராஜ்கோவா,"இது நாங்கள் எதிர்பாராத கதை. என்னுடைய மகள் தேசியக்கொடி கேட்டபோது எனது மாமியார் இதனை வெளியே எடுத்தார். அப்போதுதான் அது வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தோம். அதனை பேஸ்புக்கில் பதிவிட்டபோது அது வைரலாகிவிட்டது. இந்த கொடியை வைத்திருப்பதை நாங்கள் பாக்கியமாக கருதுகிறோம்" என்றார்.

INDIA, FLAG, HISTORY, தேசியகொடி, இந்தியா, வரலாறு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்