“வருது.. வருது”.. ‘ஓடிடியில்’ இதுவரைக்கும் இல்லாம இருந்த அந்த விஷயம்.. ‘இப்போ வருது!’ - மத்திய அமைச்சர் அதிரடி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று பரவத் தொடங்கியதை அடுத்து மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டிய சூழல் உண்டாகியது.

உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவை எதிர்கொள்வதற்கான உடனடி மற்றும் எளிய வழி முறைகளாக முக கவசம் அணிவது, சமூக இடைவெளி மற்றும் அத்துடன் சேர்த்து பொது முடக்கங்களையும் அமல்படுத்தின. இந்த பொதுமுடக்கத்தால் பெரும்பாலோனோர் வீடுகளுக்குள் இருந்து பணிபுரியத் தொடங்கினர். இதேபோல் பொழுதுபோக்கிற்காக திரையரங்குகளுக்கு மக்கள் செல்ல வேண்டிய சூழலும் இல்லாமல் போனது.

இந்த நிலையில் தான் ஏற்கனவே ஏற்கனவே சன்னமாக இயங்கிக் கொண்டு வந்திருந்த ஓடிடி பிளாட்பார்ம்ங்களின் வரத்து அதிகரித்தது. அவை இயங்கும் விதமும் பரவலானது. முன்பைவிட எண்ணற்ற ஓடிடி படைப்புகள் வெளியாக தொடங்கின. தற்போது மீண்டும் கொரோனா காலம் என்பது ஓரளவுக்கு முடிந்து, பொது முடக்கங்களில் பல தளர்வுகள் ஏற்பட்டு மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினாலும், திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் கூட திரையரங்குகளுக்கு இணையான படைப்பு ஒளிபரப்பு என்பது ஓடிடி பிளாட்பார்ம்ங்களில் நிகழத் தொடங்கி இருக்கிறது‌.

ஆனால் திரையரங்குகளை பொருத்தவரை வெளியாகும் படங்கள், அவற்றில் பேசப்படும் பேசு பொருள்கள்  மற்றும் காட்சிக்கட்டமைப்புகள் என பலவற்றிற்கும் பல விதமான விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் இருக்கின்றன. தற்போது திரையரங்குகளுக்கு இணையாகவே மாறிவிட்ட ஓடிடிட தளங்களுக்கு  அப்படியான கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில்தான் ஓடிடி தளங்களுக்கும் கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் கட்டமைக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலரும் கூறிவந்தனர். கடிவாளங்கள் ஓடிடி பிளாட்பார்ம்ங்களுக்கு கண்டிப்பாக வேண்டுமென்றும் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

ALSO READ: 'ஜெயலலிதா படம்.. அதிமுக கொடி!'.. சசிகலா பயணித்த காருக்கு சொந்தக்காரர் இவர்தான்! - அடுத்த கணமே தலைமை எடுத்த பரபரப்பு நடவடிக்கை!

இந்த நிலையில் மாநிலங்களவையில் இதுகுறித்து பேசிய  மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஓடிடி பிளாட்பார்ம்ங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அதிரடியாக தெரிவித்திருக்கிறார். அவருடைய இந்த அறிவிப்பு இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமான அறிவிப்பாக கருதப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்