'ஏடிஎம்'-ல் பணம் எடுக்க இனிமேல் வரி'?... 'மத்திய அரசு' அதிரடி...'கருப்பு பண' தடுப்பா?
முகப்பு > செய்திகள் > இந்தியாடிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள மக்களை ஊக்குவிக்கும் வகையில்,ஏடிஎம் மூலம் ரொக்கத்தொகை பரிவர்த்தனை செய்பவர்களுக்கு வரி விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அதன் ஒரு அங்கமாக சமீபத்தில் ஆர்டிஜிஎஸ் மற்றும் நெப்ட் ஆகிய ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கான,கட்டணத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்தது.மேலும் இணையவழி மூலமாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க,ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வங்கிகளில் இருந்தோ, ஏடிஎம் மூலமாகவோ எடுப்பவர்களுக்கு வரி விதிப்பதற்கு,மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இதன் மூலம் கருப்பு பண புழக்கத்தை தடுக்கவே இந்த நடவடிக்கையினை எடுக்க இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.இதனிடையே பெருமளவில் நடக்கும் பண பரிவர்த்தனைகளை ஆதரவுடன் இணைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதன் மூலம் தனி நபர்களையும்,நிறுவனங்களையும் கண்காணிப்பது எளிது என மத்திய அரசு கருதுகிறது.
ஆதார் பயன்படுத்தி செய்யப்படும் பரிவர்த்தனைகளை இன்னும் பாதுகாப்பானதாக மாற்ற, சம்பந்தப்பட்டவரின் மொபைல் போனுக்கு OTP பாஸ்வேர்டை அனுப்பவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்புகள் அனைத்தும் வரும் பட்ஜட்டில் இடம் பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘திடீரென பற்றி எறிந்த ஏடிஎம் மையம்.. பதறிய மக்கள்’! சாம்பலான பல லட்சம் ரூபாய்! பதற வைக்கும் சம்பவம்!
- 'இதுல மட்டும்தான் இன்னும் ஆதார இணைக்கல.. இப்போ அதுக்கும்’ .. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
- ‘இனி ஏடிஎம் போனா ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் போல’.. பணம் எடுக்கும் போது படமெடுத்த பாம்பு.. பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ!
- ஏடிஎம்-ஐ தகர்த்த 11 பேர் சுட்டுக்கொலை.. போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே பரபரப்பு சம்பவம்!
- ‘இந்த பேங்க் கஸ்டமரா நீங்க’? அப்டின்னா டெபிட் கார்டே இல்லாம பணம் எடுக்கலாம்!
- ‘யாரு சாமி இவன்’.. ‘எடுத்த பணத்தை திரும்பக் கொடுத்த அதிசய திருடன்’.. இப்படி ஒரு காரணமா?.. வைரல் வீடியோ!