உலக சுகாதார அமைப்பால் எச்சரிக்கப்பட்ட 4 இருமல் மருந்துகள்.. இந்தியாவுல விற்பனை ஆகுதா..? அமைச்சர் கொடுத்த விளக்கம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 4 இருமல் மருந்துகளை உபயோகிக்க வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிந்திருந்த நிலையில் இதுகுறித்த விசாரணையில் இறங்கியுள்ளது இந்திய அரசு.

Advertising
>
Advertising

ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 சிறுவ சிறுமியர்கள் உயிரிழந்த நிலையில், இந்தியாவை சேர்ந்த மருந்து நிறுவனம் தயாரித்த 4 இருமல் மருந்துகளுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என உலக சுகாதார மையம் நேற்று தெரிவித்திருந்தது. மேலும் இந்த நான்கு மருந்துகளை உட்கொண்டால் சிறுநீரக பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

4 மருந்துகள்

ஹரியானாவின் சோனிபட் பகுதியில் உள்ள தனியார் மருந்து நிறுவனம் தயாரித்த Promethazine Oral Solution, Kofexmalin Baby Cough Syrup, Makoff Baby Cough Syrup மற்றும் Magrip N Cold Syrup நான்கு மருந்துகளையும் உபயோகிக்க வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருக்கிறது. மருந்துகளை ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்ததில் அதில் டைஎத்திலீன் கிளைகால் மற்றும் எத்திலீன் கிளைகால் ஆகியவை அதிக அளவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக WHO தெரிவித்திருக்கிறது. இந்த மருந்துகளை உபயோகித்தால் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, சிறுநீர் கழிக்க இயலாமை, தலைவலி, மரணத்திற்கு வழிவகுக்கும் கடுமையான சிறுநீரக காயம் ஆகியவை ஏற்படலாம் எனவும் உலக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்திருக்கின்றனர்.

விசாரணை

இந்நிலையில், இதுகுறித்த விசாரணையில் இறங்கியிருக்கிறது ஹரியானா மாநில அரசு. இந்த தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கும் காம்பியாவிற்கு மட்டுமே ஏற்றுமதி செய்வதற்கும் மாநில மருந்து கட்டுப்பாட்டாளரால் நிறுவனம் உரிமம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருந்தின் மாதிரிகள் கொல்கத்தாவில் உள்ள மத்திய மருந்து ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக ஹரியானா மாநில சுகாதார அமைச்சர் அனில் விஜ் தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த மருந்துகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படவில்லை எனவும் ஏற்றுமதி மட்டுமே செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பரிசோதனை

அதேபோல, இந்த மருந்தின் மாதிரிகள் சி.டி.எஸ்.சி.ஓ (CDSCO) மூலம் சண்டிகரில் உள்ள பிராந்திய மருந்து பரிசோதனை ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவுகள் வெளிவந்த பிறகு அதற்கேற்றாற்போல நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அரசு அறிவித்திருக்கிறது. இதனிடையே ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான நரேஷ் குமார் கோயல்," வியாழன் அன்றுதான் இறப்புகள் குறித்த செய்திகள் எங்களுக்கு தெரியவந்தது. மருந்து விற்பனையாளரை கண்டுபிடிக்க முயற்சித்துவருகிறோம். என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இந்த மருந்துகள் விற்பனையாகவில்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.

COUGH SYRUP, GAMBIA, WHO, INDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்