‘ஊரடங்கு சிறப்பு நிவாரணம்’.. ஒரே நாளில் 4.7 கோடி ஏழை பெண்கள் பேங்க் அக்கவுண்டில் ரூ.500 போட்ட மத்திய அரசு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா சிறப்பு நிவாரண உதவித்தொகையாக ஏழை பெண்களின் வங்கி கணக்கில் ரூ.500 செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு கடந்த மார்ச் 25ம் தேதி அமல்படுத்தியது. இதனால் கூலி தொழிலாளர்கள், வியாபாரிகள், தனியார் துறையினர் பலரும் வீட்டில் முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதில் பலதரப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 26ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதியுதவி திட்டங்களை அறிவித்தார்.
அப்போது ‘ஜன்தன் வங்கி கணக்கு’ வைத்துள்ள ஏழைப்பெண்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு (ஏப்ரல் முதல் ஜூன் வரை) மாதந்தோறும் ரூ.500 சிறப்பு நிவாரணம் வழங்கப்படும் என்றும் இந்த தொகை அவர்களது வங்கு கணக்கில் செலுத்தப்படும் என குறிப்பிட்டிருந்தார். ஊரக வளர்ச்சித்துறையால் விடுவிக்கப்படுகிற இந்த நிவாரண உதவித்தொகை ஏப்ரல் முதல் வார இறுதியில் 20 கோடியே 39 லட்சம் பெண்களி ஜன்தன் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டு விடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 4 கோடியே 7 லட்சம் ஏழை பெண்களின் ஜன்தன் வங்கி கணக்கில் தலா ரூ.500 செலுத்தப்பட்டு விட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனாவை தடுக்க... கோதுமை விளக்கு வழிபாடு!'... காட்டுத்தீ போல் பரவிய தகவலால்... சென்னையில் பரபரப்பு!
- ‘ஊழியர்களுக்கு நற்செய்தி’... ‘பி.எஃப் பணம் எடுக்க அதிரடி சலுகை’... ‘ஆன்லைனில் பணத்தை பெறுவது எப்படி?’...
- கொரோனா பாதிப்பு: ‘எப்போது முதல் ரேஷன் கடைகளில்’... ‘ஆயிரம் ரூபாய் பணம், இலவச அரிசி வழங்கப்படும்?’... 'வழி முறைகளுடன் கூட்டுறவுத் துறை அறிவிப்பு'!
- ‘எப்போ வேணாலும் பிரசவ வலி வரலாம்’.. தீவிர கண்காணிப்பில் 1482 கர்ப்பிணிகள்.. தயார் நிலையில் 108 ஆம்புலன்ஸ்..!
- 'ஜீரோ பேலன்ஸ் வைத்துக்கொள்ளலாம்'... 'ஏடிஎம்மில் பணம் எடுக்க கட்டணம் இல்லை'... 'நிதியமைச்சரின் இன்னும் பல முக்கிய அறிவிப்புகள்'!
- குடும்ப அட்டைதாரர்கள், நடைபாதை வியாபாரிகள், கட்டட மற்றும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு ‘நிவாரணம்’... முதலமைச்சர் ‘அறிவிப்பு’... விவரங்கள் உள்ளே...
- ‘கொரோனா அச்சுறுத்தல்’... ‘ரத்தான ரயில் டிக்கெட் கட்டணத்தை’... எப்படி திரும்ப பெறலாம்?
- ‘கொரோனா’ பரவலைத் தடுக்க... ‘இன்று’ முதல் ‘வங்கி’ வேலை நேரம், சேவையில் ‘மாற்றம்’... ‘விவரங்கள்’ உள்ளே...
- ‘பழைய’ விலையிலேயே... ‘டபுள்’ டேட்டா, டாக் டைம்... ‘பிரபல’ நிறுவனம் அறிவித்துள்ள ‘சூப்பர்’ ஆஃபர்கள்...
- ‘கேரளா போய்ட்டு வந்த பெண்’.. ‘திடீர் காய்ச்சல், தொண்டை வலி’.. கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பெண்கள்..!