‘உளவு பார்க்கப்பட்ட இந்தியர்களின் வாட்ஸ்அப் பயன்பாடு’.. ‘விளக்கம் கேட்டு மத்திய அரசு நோட்டீஸ்’..
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியர்களின் வாட்ஸ்அப் பயன்பாடு உளவு பார்க்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. என்ற நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் பத்திரிக்கையாளர்கள், நாடுகளுக்கு இடையேயான தூதர்கள், சமூக ஆர்வலர்கள் என 1400 பேரின் செல்ஃபோன்களுக்கு மால்வேரை அனுப்பி பெகாசுஸ் என்ற மென்பொருள் மூலம் அவர்களுடைய வாட்ஸ்அப் செயல்பாடுகளை உளவு பார்த்ததாக குற்றம்சாட்டியுள்ளது.
மேலும் பஹ்ரைன், மெக்சிகோ, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களின் வாட்ஸ்அப் பயன்பாடும் உளவு பார்க்கப்பட்டதாக ஃபேஸ்புக் குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள மத்திய அரசு நவம்பர் 4ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்துப் பேசியுள்ள உள்துறை அமைச்சக அதிகாரிகள், “நாடு முழுவதும் முக்கிய பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்ற சிலரின் வாட்ஸ்அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான தகவல் பற்றி மக்கள் கவலைப்படத் தேவையில்லை. அதற்கு தேவையான நடவடிக்கைகள் கண்டிப்பாக எடுக்கப்படும். குடிமக்களின் உரிமைகள் சட்டப்படி பாதுகாக்கப்படுவதை அரசு உறுதி செய்யும்” எனத் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இனி மெசேஜிலும் ஃபோட்டோ, வீடியோ ஷேர் செய்யலாம்’.. ‘இந்தியாவில் அறிமுகமானது கூகுளின் RCS மெசேஜிங் சேவை’..
- ‘பிரபல கேப்டனுக்கு’.. ‘2 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடத் தடை’.. ‘ஐசிசி அதிரடி’..
- 'உடல் முழுவதும் வெடிகுண்டு'.. 'அச்சுறுத்தும்படி போஸ் கொடுத்த பாடகி'...'ஹேப்பி தீபாவளி' சொன்ன நெட்டிசன்கள்!
- ‘இனி உங்க அனுமதி இல்லாம யாரும் இத பண்ண முடியாது’.. வாட்ஸ் அப்-க்கு வந்த அசத்தல் அப்டேட்..!
- ‘36 வருஷத்துக்குப் பின்’... ‘துவங்கிய சேவை’... ‘சென்னை டூ யாழ்ப்பாணம்’... மகிழ்ச்சியில் பயணிகள்!
- 'இனிமே எல்லாம் இப்படித்தான்'... திருப்பூர் கலெக்டர் அதிரடி!'.. 'குவியும் பாராட்டுக்கள்!
- 'குறைவான வருமானம்’... ‘செலவு அதிகம்’... '3-வது முறையாக’... ‘ஆள்குறைப்பில் பிரபல நிறுவனம்’!
- 'வாட்ஸ் அப்'பில் குழந்தைகளின் 'ஆபாச வீடியோ'...'சிபிஐ எடுத்த அதிரடி'...சென்னையை அதிரவைக்கும் சம்பவம்!
- ‘ஜாம்பவான்களின் அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பம்’ ‘ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்’.. வெளியான அதிரடி அறிவிப்பு..!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!