8 பேரு போற மாதிரி காரா? அப்படின்னா 'அது' கண்டிப்பா இருந்தாகணும்! ஆறுல ஒண்ணு கூட குறைய கூடாது!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

8 பேர் பயணிக்கும் கார்களுக்கு கண்டிப்பாக இருக்க வேண்டியது குறித்து புதிய வரைவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Advertising
>
Advertising

6 ஏர்பேக்குகளை கட்டாயமாக்குவதற்கான வரைவு

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த வியாழக்கிழமை அதாவது ஜனவரி 14 ஆம் தேதி ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில், '8 பயணிகளை ஏற்றிச் செல்லும் மோட்டார் வாகனங்களில் பயணிப்பவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், குறைந்தபட்சம் 6 ஏர்பேக்குகளை கட்டாயமாக்குவதற்கான வரைவு ஜிஎஸ்ஆர் அறிவிப்பிற்கு இப்போது ஒப்புதல் அளித்துள்ளேன்' என கூறியுள்ளார்.

அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தல்:

இதற்கு முன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே அமைச்சர் நிதின் கட்கரி இந்தியாவில் உள்ள அனைத்து வாகன உற்பத்தியாளர்களும் தாங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு மாடலின் அனைத்து வகைகளிலும் குறைந்தபட்சம் ஆறு ஏர்பேக்குகளை நிலையான உபகரணங்களாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் இவரின் இந்த ட்வீட்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த அறிவிப்பில் குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும் வரும் மாதம் முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து வாகனங்களிலும் இரட்டை ஏர்பேக்குகள் கட்டாயம்:

கடந்த ஜூலை 1, 2019 முதல் அனைத்து பயணிகள் வாகனங்களுக்கும் ஓட்டுனர் ஏர்பேக் கட்டாயமாக்கப்பட்டது. அதோடு, இந்த ஜனவரியில் அனைத்து வாகனங்களிலும் இரட்டை ஏர்பேக்குகள் (ஓட்டுனர் மற்றும் பயணிகள்) கட்டாயமாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்பு முன் மற்றும் பின் இருக்கைகள் இரண்டிலும் அமர்ந்திருப்பவர்களுக்கு பாதிப்பைக் குறைக்கும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. அதோடு கூடுதல் ஏர்பேக்குகள் 'M1'வாகனப் பிரிவில் கட்டாயமாக்கப்பட உள்ளது என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன.

மேலும், ‘எம்1’ வாகனம் என்றால், “ஓட்டுனர் இருக்கை உள்பட எட்டு இருக்கைகளை உள்ளடக்கிய, பயணிகளை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்படும் மோட்டார் வாகனம்” என்று குறிப்பிடப்படுகிறது.

 

எனவே, இது திட்டவட்டமாக, இந்தியாவின் சாலைகளில் பயணிக்கும் பெரும்பாலான பயணிகள் கருத்தில் கொள்ள வேண்டிய காரியமாக உள்ளது.

8-PASSENGER, AIRBAGS, CARS, ஏர்பேக்குகள், கார்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்