கரண்டியை கையில் எடுத்த தமிழசை.. தலைவாழை இலை போட்டு அண்ணாமலைக்கு.. ஒரே வார்த்தையில் உருக வைத்து சபாஷ்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கோவை: தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் உணவு பரிமாறியுள்ள புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழிசை

Advertising
>
Advertising

தமிழகத்தில் பாஜக எப்படியாவது காலூன்ற வேண்டும் என்ற முயற்சியில் பல ஆண்டுகளாக பலரும் முனைப்பு காட்டி வருகின்றனர்.  தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும், கழகங்கள் இல்லாத  தமிழகத்தை உருவாக்குவோம் என்ற முழக்கத்துடன் பாஜக களமாடி வருகிறது. இருப்பினும், எதிர்பார்த்த அளவிற்கு பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை. அப்போதைய மாநில தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் அதற்கான பகிரத முயற்சிகளை முன்னெடுத்தார்.

தமிழிசை சவுந்தரராஜனுக்கு முன்புவரை பாஜக என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான கட்சி என்ற பிம்பம் இருந்து வந்த நிலையில் ,அந்த பிம்பம் தமிழிசை சௌந்தரராஜனால் உடைக்கப்பட்டது. அதன் பின்பு பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் வேல் யாத்திரை மூலம் மூலை முடுக்கெல்லாம் பாஜகவுக்கு வலு சேர்த்தார். தற்போது தலைவராக உள்ள அண்ணாமலை இளைஞர்களை கட்சியில் இணைப்பதில் முனைப்பு காட்டி வருகிறார்.

இந்நிலையில், திருமண நிகழ்வு ஒன்றில் பாஜக நிர்வாகிகளுக்கு உணவு பரிமாறும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் மகன் திருமணம் கோவை அவிநாசி சாலையிலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில், தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, விவசாயி அணித் தலைவர் ஜி.கே.நாகராஜ், எம்.எல்.ஏ காந்தி, குஷ்பு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  அப்போதுதான் அங்கிருந்த ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பாஜக நிர்வாகிகளுக்கு உணவு பரிமாறி அவர்களை ஆச்சரியத்தில் அழுத்தினார்.

வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய போறவங்களே.. உங்களுக்கு இந்த பட்ஜெட்டில் மிகப் பெரிய அறிவிப்பு வருது!

 

இது எனக்கு பெருமை

இதுகுறித்து ஜி.கே நாகராஜன் கூறியதாவது,  அண்ணாமலை, காந்தி, நான் மணமக்களை வாழ்த்திவிட்டுக் கீழே இறங்கினோம். முக்கிய நிர்வாகிகளுக்கு சாப்பிடத் தனியாக இடம் ஒதுக்கியிருந்தனர். அங்கு தமிழிசையும் இருந்தார். அவரையும் சாப்பிட அழைத்தோம். அவர் வேண்டாம்  என்று கூறிவிட்டு, கட்சியின் உண்மையான உழைப்பாளி, உங்களுக்குப் பரிமாறுவதில் பெருமை, என்று எங்கள் மூன்று பேருக்கும் அன்போடு பரிமாறினார். எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 

இதுதான் மாஸ்டர் ஸ்டோக்.. சென்னை மேயர் விவகாரத்தில் திமுக நிகழ்த்திய அதிரடி

புதுச்சேரி, தெலங்கானா என்று இரண்டு மாநிலங்களுக்கு ஆளுநராக இருப்பவர், உணவு பரிமாறுவது சாதாரண விஷயமல்ல. வேறு யாரும் இதைச் செய்ய மாட்டார்கள். மற்ற கட்சிகளில் ஆளுநரின் அருகிலேயே யாரும் செல்ல முடியாது. தமிழகத்தில் தாமரை மலரும் என்று தன்னம்பிக்கையுடன் அடிக்கடி கூறியவர். தற்போது, தமிழ்நாட்டில் நாங்கள் நான்கு இடங்களில் வென்றதற்கு அவரும் ஒரு காரணம். கடுமையான உழைப்புதான் அவரை இந்த இடத்துக்குக் கொண்டுவந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

GOVERNOR TAMIZHAI SAUNDARAJAN, EXCHANGES FOOD WITH BJP, COIMBATORE, ANNAMALAI, அண்ணாமலை, தமிழிசை சௌந்தர்ராஜன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்