கால் இடறி கீழே விழுந்த சம்பவம்.. பரபரப்புக்கு மத்தியில் ஜாலியாக கமெண்ட் கொடுத்த ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபுதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கால் இடறி கீழே விழுந்த சம்பவம் பற்றி நகைச்சுவையுடன் பேசி இருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் நேற்று காலை விண்ணில் ஏவப்பட்டது. மாமல்லபுரத்தை அடுத்த பட்டிப்புலம் என்னும் இடத்தில் 3500 அரசு பள்ளி மாணவர்கள் இணைந்து தயாரித்த 150 செயற்கைக் கோள்களை சுமந்தபடி விண்ணில் ஏவப்பட்டது இந்த ராக்கெட். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
ராக்கெட் ஏவப்படும் இடத்திற்கு பாதுகாப்பு சூழ வந்திருந்த தமிழிசை சௌந்தர்ராஜன் அங்கு விரிக்கப்பட்டிருந்த ரெட் கார்பெட்டில் கால் இடறி நிலை தடுமாறி கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தூக்கி விட்டனர். இதனால் அந்த இடத்தில் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது .இதனை எடுத்து தான் நன்றாக இருப்பதாகவும், காயங்கள் ஏதும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார். அதன் பிறகு நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.
Images are subject to © copyright to their respective owners.
இந்த சூழ்நிலையில் பழனியில் நடைபெற்ற லயன்ஸ் கிளப் நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். அப்போது தான் கீழே விழுந்த சம்பவம் பற்றி நகைச்சுவையுடன் அவர் குறிப்பிட்டார். இது பற்றி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசுகையில், " எனது செல்போனுக்கு போன் வந்தபடியே இருக்கிறது. ஃபோனில் கீழே விழுந்து விட்டீர்களாமே? காயம் ஏதும் ஏற்பட்டதா? என நலம் விசாரித்து வருகின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
உங்களுக்கு எப்படி தெரியும்? எப்போது பார்த்தீர்கள் என கேட்டபோது தொலைக்காட்சியில் பார்த்ததாக சொன்னார்கள். விழுந்து விழுந்து வேலை பார்க்கும் போது தொலைக்காட்சியில் செய்தியை வருவது கிடையாது. ஆனால் கீழே விழுந்தால் பெரிய செய்தியாக வந்து விடுகிறது" என சிரித்தபடியே அவர் கூற அரங்கத்தில் சிரிப்பொலி எழுந்தது.
Also Read | "ரோஹித், கோலி".. ரெண்டு பேருக்கும் முதல் முறையா இப்படி ஒரு அவுட்.. ஒரே மேட்ச்ல நடந்த சம்பவம்!!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "நடராஜரும்.... நானும்..... இடையில்... நாரதர்கள் வேண்டாமே" - சிதம்பரம் கோவிலில் திருமஞ்சனம் தரிசனம் குறித்து தமிழிசை.!
- 'தமிழிசை சவுந்தரராஜனின்' நெருங்கிய உறவினர் தற்கொலை... 'கோவையில்' நிகழ்ந்த அதிர்ச்சி 'சம்பவம்'... 'போலீசார் விசாரணை'...
- ‘டங்க் ஸ்லிப்பாகி’ கனிமொழிக்கு ஓட்டு கேட்க முனைந்த அதிமுக வேட்பாளர்.. சிரித்து களைத்த தொண்டர்கள்!