நீங்கள் TABLIGHI JAMAAT-ன் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவரா? ... கலந்து கொண்டவர்கள் உங்களுக்கு தெரிந்தவர்களா ? ... அப்படின்னா இந்த செய்தியை உடனே செக் பண்ணுங்க!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் இரண்டு வாரங்களுக்கு முன் நடைபெற்ற நிஜாமுதீன் தப்லிஹி மாநாட்டில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தப்லிஹி மாநாட்டிற்கு இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுமார் ஆயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த மாநாட்டில் கலந்து கொண்ட தமிழகத்தை சேர்ந்த 45 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் பலர் தாங்களாக முன்வந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும் சிலர், பரிசோதனை செய்ய விரும்பாமல் வீட்டிலேயே இருப்பதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு கொரோனா பரவலைத் தடுக்க மத்திய சுகாதாரத்துறை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. 'மார்ச் 8 முதல் 20 வரை டெல்லியில் நடைபெற்ற நிஜாமுதீன் தப்லிஹி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று அபாயம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாநாட்டில் கலந்து கொண்டு இன்னும் கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படமால் இருப்பவர்கள் 080 - 29711171 என்ற எண்ணிற்கு உடனடியாக அழைக்க வேண்டும்' என தெரிவித்துள்ளது.
அதே போல தமிழக அரசும், தமிழகத்திலிருந்து தப்லிஹி மாநாட்டில் கலந்து கொண்ட யாரேனும் இன்னும் பரிசோதனை செய்யாமல் இருந்தால் உடனடியாக 7824849263, 044 - 42674411 ஆகிய எண்ணிற்கு உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘நகர்ந்து நகர்ந்து ஓடும் குட்டிப்புதர்!’.. ஊரடங்கு நேரத்தில் நபர் செய்த வைரல் காரியம்.. ‘தீயாக’ பரவும் வீடியோ!
- ‘பிரசவ வலியில் துடித்த இளம் பெண்’... ‘வெகுநேரமாகியும் கிடைக்காத ஆம்புலன்ஸ்’... ‘போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஃபோன் செய்த குடும்பத்தினர்’... 'நெகிழ வைத்த காவலர்கள்'!
- ‘கணுக்கால் முறிவு’!.. ‘இன்னும் 240 கிமீ இருக்கு’.. ‘எனக்கு வேற வழி தெரியல’.. ஊரடங்கால் இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!
- 'ரோடு க்ளோஸ் பண்ணா என்ன' ... 'இதெல்லாம் எங்கள ஒண்ணும் பண்ணாது' ... எல்லைகள் கடந்து ஈர்த்த முதுமைக் காதல்!
- 'தனிமைப்படுத்தப்பட்டவங்க எந்த ஏரியால இருக்காங்கனு தெரிஞ்சுக்கணுமா? ... சென்னை மாநகராட்சியின் சூப்பர் முயற்சி!
- 'எத்தனையோ போலீஸ் பாத்துட்டோம்' ... 'ஆனா இவங்க வேற ரகம்' ... பெங்களூரு போலீசாரின் கலக்கல் விழிப்புணர்வு!
- 'பசங்களா, இங்க வாங்க அடிக்கமாட்டோம், வாங்க' ... ஒன்றாக சமைத்துச் சாப்பிட்டு ... போலீசிடம் சிக்கிக் கொண்ட இளைஞர்கள்!
- '2000 பேர்' பங்கேற்ற 'மத நிகழ்ச்சி'... '200' பேருக்கு 'வைரஸ் தொற்று'... 'தமிழகத்திலிருந்து' பங்கேற்ற '82 பேருக்கு' அறிகுறி...
- 'எனக்கு சமோசா சாப்பிடணும் போல இருக்கு' ... 'இருக்குற ரணகளத்துல கண்டிப்பா 'சமோசா' சாப்பிடணுமா' ... 'அவசர' எண்ணிற்கு அழைத்து அடம்பிடித்த இளைஞர்!
- 'ஊரடங்கிலும் உயர்ந்து நின்ற மனிதநேயம்' ... உயிரிழந்த ஹிந்து மத நபருக்கு ... இறுதி சடங்கு செய்த முஸ்லீம் நண்பர்கள்!