பூட்டிய வீட்டுக்குள்ள இருந்து ஊதுபத்தி வாசனை.. 4 நாள் கழிச்சு எழுந்த கடுமையான துர்நாற்றம்.. போலீஸ் விசாரணையில் தெரியவந்த திடுக் தகவல்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்திர பிரதேச மாநிலத்தில் இறந்துபோன தாயின் உடலை கட்டிலுக்கு அடியே மறைத்து மைத்திருந்த மகனை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

பூட்டிய வீட்டுக்குள்ள இருந்து ஊதுபத்தி வாசனை.. 4 நாள் கழிச்சு எழுந்த கடுமையான துர்நாற்றம்.. போலீஸ் விசாரணையில் தெரியவந்த திடுக் தகவல்கள்..!
Advertising
>
Advertising

உத்திர பிரதேச மாநிலம், கோரக்பூர் அருகே ஷிவ்பூர் சஹாபஜ்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் சாந்தி தேவி. 82 வயதான இவர் உள்ளூரில் உள்ள பள்ளி ஒன்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்கிறார். இவருடைய கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் மரணமடைந்திருக்கிறார். இந்த தம்பதிக்கு ஒரே மகன் இருக்கிறார். அவருக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கும் நிலையில், சமீபத்தில் இவரது மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.

Gorakhpur man kept mother body under bed for 4 days detained

சாந்தி தேவியின் மகன் போதை பொருளுக்கு அடிமையாகி இருந்ததாகவும் அதனால் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் சாந்தி தேவியின் வீட்டுக்குள் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதை அக்கம் பக்கத்தினர் உணர்ந்திருக்கின்றனர்.

உடனடியாக இதுகுறித்து கோரக்பூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சாந்தி தேவியின் வீட்டுக்குள் நுழைந்திருக்கின்றனர். அப்போது வீட்டில் அவருடைய மகன் மட்டும் இருந்திருக்கிறார். வீட்டுக்குள் துர்நாற்றம் வருவதை உணர்ந்த போலீசார் வீடு முழுவதும் பரிசோதனை செய்திருக்கின்றனர்.

அப்போது, படுக்கையறையில் கட்டிலுக்கு கீழே சாந்தி தேவியின் உடல் இருந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸ், உடலை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர். அவர் உயிரிழந்ததற்கான காரணம் பிரேத பரிசோதனையின் முடிவில் தெரியவரும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதுதொடர்பாக சாந்தி தேவியின் மகன் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 4 நாட்களுக்கு முன்னர் சாந்தி தேவி உயிரிழந்ததாகவும், துர்நாற்றம் வெளியே தெரியாமல் இருக்க ஊதுபத்திகளை பயன்படுத்தி வந்ததாகவும் இருப்பினும் கடந்த செவ்வாய்க்கிழமை அக்கம் பக்கத்தினர் துர்நாற்றம் வருவதை உணர்ந்து போலீசுக்கு தகவல் கொடுத்ததாகவும் தெரிவித்திருப்பதாக போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.

இதுகுறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீஸ் சூப்பிரண்டண்டு மனோஜ் குமார் அஸ்வதி தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் உள்ளூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

UP, MOTHER, POLICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்