'இந்தியாவின் மோசமான மொழி எது'?... 'எங்களை பாத்தா இளக்காரமா இருக்கா'... 'கொந்தளித்த நெட்டிசன்கள்'.... வாங்கி கட்டி கொண்ட கூகுள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவிலேயே மோசமான மொழி என்ன என்று ஆங்கிலத்தில் கூகுளில் தேடினால், அதற்காக வந்த பதில் கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கூகுள் தேடலில் What is the ugliest language in India (இந்தியாவின் மோசமான மொழி எது) எனத் தேடினால் அதற்குப் பதிலாகக் கன்னட மொழியைக் கூகுள் காட்டியிருந்தது. இந்த விவகாரம் கர்நாடகாவில் கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கன்னட மொழி பேசும் மக்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சியினர் இந்த விவகாரத்தில் கூகுள் நிறுவனத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்தியாவின் மோசமான மொழி கன்னடம் எனக் காட்டியதற்குக் கன்னட மொழி வளர்ச்சி அமைச்சர் அரவிந்த் லிம்பவலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், கூகுள் நிறுவனம் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், இது தொடர்பாகக் கூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.
சமூகவலைத்தளங்களில் கூகுள் நிறுவனத்திற்கு எதிராகக் கன்னட மக்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இந்தியாவின் மோசமான மொழி கன்னடம் எனக் காட்டப்பட்டதற்குக் கூகுள் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. இதுகுறித்து கூகுள் நிறுவனம் விளக்கமளிக்கையில், கன்னட மொழி மோசமான மொழி என்பது கூகுளின் கருத்து இல்லை. இது போன்று கூகுள் தேடுதல் தளத்தில் எதிர்பாராத விதமாக நடந்து விடுகிறது.
இச்சம்பவத்திற்காகக் கூகுள் கன்னட மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறது' எனத் தெரிவித்துள்ளது. மேலும், கன்னட மொழி தொடர்பாகக் கூகுள் தேடு தளத்தில் வெளியான தவறான பதிவுகளையும் கூகுள் நீக்கியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘நாங்க சோஷியல் மீடியா கிடையாது’!.. அந்த ரூல்ஸ்ல இருந்து எங்களுக்கு ‘விலக்கு’ வேணும்.. நீதிமன்றத்தை நாடிய கூகுள்..!
- 'செப்டம்பர்ல மட்டும் தான் இனி ஆஃபிஸ் இருக்கும்'!.. பிரபல ஐடி நிறுவனம் அதிரடி!.. ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிஇஓ!
- 'எல்லாரும் கம்பெனி நஷ்டத்துல ரன் ஆயிட்டு இருக்கேன்னு...' 'ஃபீல் பண்ணிட்டு இருந்த நேரத்துல...' - மூக்கு மேல கை வைக்குற மாதிரி 'கூகுள்' சொன்ன 'அந்த' விஷயம்...!
- பிரபல 'ஸ்மார்ட் வாட்ச்' நிறுவனத்தை வாங்கிய கூகுள்...! - 'அவங்க எப்படி கொடுத்தாங்களோ...' - அதே மாதிரி நாங்களும் தருவோம்...!
- ‘தந்தை இறந்து’.. ‘7 வருடம் ஆன பின்னும்’.. ‘கூகுள் எர்த்தில் தேடிய மகனுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்!’.. நெகிழ வைத்த சம்பவம்!
- கூகுள்ல 'இந்த' பிரச்சனை இருக்குங்க...! 'தவறை கண்டுபிடித்த சென்னை இன்ஜினியரிங் மாணவர்...' 'வெறும் பாராட்டோடு முடிக்கல...' - கூகுள் கொடுத்த 'வாவ்' பரிசு...!
- அந்த இடத்துல ஒரு ‘மிஸ்டேக்’ இருக்கு.. கூகுளை ‘அலெர்ட்’ பண்ணிய சென்னை மாணவருக்கு அடித்த ‘ஜாக்பாட்’..!
- 'கையில பணம் இல்லயா?.. அப்போ கூகுள் பே-ல அனுப்பு!'.. நூதன முறையில் வழிப்பறி!.. 'இது என்னங்க டா புது ட்ரெண்டா இருக்கு?
- கூகுள்... ஆப்பிள்... நெட்பிளிக்ஸ் நிறுவனங்களில் வேலைக்கு சேர்வது எப்படி?.. வெளியான அதிர்ச்சி தகவல்!.. வாயடைத்துப் போன பட்டதாரிகள்!
- ‘விளம்பர சந்தையில் தனி ஆதிக்கம்'... ‘கூகுள் நிறுவனம் மீது அமெரிக்க மாகாணங்கள் வழக்கு’...!!!