மண்'ண தோண்டுறப்போ தொழிலாளர்கள் பாத்த விஷயம்.. 142 வருஷம் கழிச்சு தென்பட்ட 'தங்க' பாம்பு!!.. History'அ கேட்டு ஆடிப் போன மக்கள்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

142 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்த பாம்பு தொடர்பான செய்தி, தற்போது  பலருக்கும் பிரம்மிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "மக UPSC-க்கு படிக்குறா, நானும் உதவி பண்ணனும்'ல".. ஆட்டோ ஓட்டிக்கிட்டே அப்பா செஞ்சு வரும் காரியம்!!

உலகில் இதுவரை 3,500 க்கும் மேற்பட்ட பாம்பு வகைகள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றது. இதில் நமக்கு தெரிந்த பாம்பு வகைகள் ஏராளம் இருக்கலாம். ஆனால் அவை அனைத்தையும் தாண்டி அரிதான பாம்பு வகைகளும், வியக்கத்தக்க குணாதிசயங்களைக் கொண்டும் ஏராளமாக திகழ்ந்து வருகிறது.

அப்படி ஒரு பாம்பு குறித்த தகவல் தான், தற்போது தெரிய வந்துள்ளது. பொதுவாக பாம்புகள் என்றால், வெளியே நடமாடும் வகையில் இருப்பதாக தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், சில பாம்புகள் மனிதர்கள் கண்ணில் கூட அகப்படாமல் மிக மிக அரிதாகவே தோன்றும் வகையிலான பாம்புகளும் நிறைய உள்ளது.

அந்த வகையில் ஒன்றான "தங்க கவசவாலன்" (Golden Shieldtail Snake) என்னும் பாம்பு மண்ணுக்குள் இருந்து வெளியே வந்ததால் ஆய்வாளர்கள் அனைவரும் மிரண்டு போயுள்ளனர். இதற்கு காரணம், சுமார் 142 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தங்க கவசவாலன் பாம்பு மனிதர்கள் கண்ணில் சிக்கியுள்ளது தான்.

மண்ணுக்குள் பல அடி ஆழத்தில் இந்த பாம்பு வசிக்கும் என தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், இரவு நேரங்களில் இரை தேட மட்டும் தான் வெளியே வரும் என்றும் கூறப்படுகிறது. மிகவும் கூர்மையான பார்வைத் திறன் இதற்கு உள்ளதால் கடும் இருட்டிலும் இந்த பாம்பு இரை தேடும் தன்மை கொண்டதாகும்.

கடந்த 1880 ஆம் ஆண்டு, வயநாடு பகுதியில் உயிரியல் அறிஞர் ஒருவர் இந்த தங்க கவசவாலன் பாம்பை முதல் முதலில் பார்த்ததாக கூறப்படுகிறது. அப்போதே அந்த பாம்பு குறித்த தகவலை அவர் ஆவணப்படுத்தி உள்ளார்.

பல முறை இந்த அரிய தங்க கவசவாலன் பாம்பை தேடி பார்த்தும் எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி இருக்கையில், சமீபத்தில் வயநாடை அடுத்த சுல்தான்பாதிரி அருகே பெம்பரமலை என்னும் மலைப்பகுதியில் இந்த பாம்பு தென்பட்டுள்ளது.

அங்கே தொழிலாளர்கள் சிலர் மண்ணைத் தோண்டி கொண்டிருந்த போது, இந்த பாம்பு வெளியே வந்துள்ளதாக கூறப்படுகிறது. உடனடியாக இது பற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்ட்டது. தொடர்ந்து, அங்கே வந்த அதிகாரிகள் இதனை மீட்டு சென்றுள்ளனர்.

மற்ற பாம்புகளை போல இல்லாமல், இதன் தோல் தங்க நிறத்தில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றது. 142 ஆண்டுகள் கழித்து பாம்பு ஒன்று தென்பட்டுள்ள விஷயம், பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

Also Read | கேரளாவையே குலை நடுங்க வைத்த 'மர்ம' பூஜை.. முக்கிய புள்ளி பத்தி தெரிய வந்த 'உண்மை'.. 3 வருசமா போட்ட 'பகீர்' பிளான்?!

SNAKE, GOLDEN SHIELDTAIL SNAKE, தங்க பாம்பு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்