ஏர்போர்ட்ல திரு திரு-ன்னு முழிச்ச பயணி.. அவர் கொண்டுவந்த மிஷின் மேலதான் சந்தேகமே வந்திருக்கு.. பிரிச்சு பார்த்ததும் அதிகாரிகளே அதிர்ந்து போய்ட்டாங்க..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் சட்ட விரோதமாக தங்கம் கடந்திவர முயன்ற பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர்.

Advertising
>
Advertising

Also Read | BREAKING: உ.பி முன்னாள் முதல்வர் முலாயம்சிங் யாதவ் காலமானார்.. அதிர்ச்சியில் அரசியல் தலைவர்கள்..!

கடத்தல்

வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதைப்பொருள், வெளிநாட்டு கரன்சிகளுடன் இந்தியா வரும் நபர்களை இந்திய விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து கைது செய்து வருகின்றனர். பணத்திற்காக இளைஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக காவல்துறை அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர். இதுபோன்ற கடத்தலில் ஈடுபடும் நபர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டாலும், கடத்தல் முயற்சிகள் தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கின்றன.

துபாய் பயணி

அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து ஹைதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணி ஒருவர் ஏர் கம்பிரஷர் கருவியை எடுத்து வந்திருக்கிறார். அப்போது அவர்மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வரவே, அவருடைய உடைமைகள் பரிசோதனை செய்யப்பட்டிருக்கின்றன. அப்போது அந்த பயணி கொண்டுவந்த ஏர் கம்பிரஷரில் 24 கேரட் மதிப்புடைய  4.8 கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த தங்கத்தின் சந்தை மதிப்பு  2.57 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

7.6 கிலோ

அதேபோல துபாயில் இருந்து ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்த இரு பயணிகளையும் அதிகாரிகள் பரிசோதனை செய்யும்போது அவர்களிடம் இருந்து தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. அவர்கள் கொண்டுவந்த பையில் ரகசிய இடம் அமைத்து அதில் தங்கத்தினை பதுக்கி எடுத்து வந்தது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதன் மொத்த எடை 2.8 கிலோ இருந்ததாகவும் இதன் மதிப்பு 1.47 கோடி ரூபாய் எனவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இப்படி, இருவேறு கடத்தல் முயற்சிகள் மூலமாக 7.6 கிலோ தங்கம் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, துபாயில் இருந்து தங்கம் கடத்திவந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து, இது குறித்த விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக விமான நிலையமே பரபரப்புடன் காணப்பட்டது.

Also Read | எழுதுறாங்களா இல்ல வரையுறாங்களா?.. நெட்டிசன்களை பொறாமைப்பட வச்ச வீடியோ.. யாருப்பா அவரு..?

AIRPORT, GOLD, HYDERABAD AIRPORT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்